பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கண்டறியாதன கண்டேன்

கிடைத்தது. படங்களிலே பார்ப்பது போன்றதன்று அந்த அநுபவம். குருதியும் தசையும் கொண்டு, அங்கமும் ஆடையும் இணைந்து தோற்றம் அளிக்கும் அந்த வடிவங் களில் அசைவு ஒன்றுதான் இல்லை. மற்றப்படி அவை உயிர் ஓவியங்களே.

இந்தச் சாலைக்கு அருகில் கோள்களின் காட்சிச் சாலை (Planetarium) ஒன்று இருக்கிறது. அதில் நட்சத்திரங்களே யும் கிரகங்களையும் காட்டுகிருர்கள். கூண்டு போன்று அமைந்த கூரையும் வட்டமான இடமும் கொண்ட இவ் விடத்தில் லட்சம் பவுன் விலையுள்ள புரொஜெக்டர் ஒன்று இருக்கிறது. காட்சிகளைக் காட்டும் போது விளக்கை அணைத்துவிடுகிரு.ர்கள். மேலே பார்த்தால் லேவானம் தெரிகிறது. நட்சத்திரங்கள், கோள்கள் தெரிகின்றன. ஒருவர் விளக்கம் கூறிக்கொண்டே இருக்கிருர். ஒர் ஒளிக் கதிர் அவர் கூறும் இடங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இத் தகைய நட்சத்திரக் காட்சி மண்டபம் கல்கத்தாவிலும் இருக்கிறது. நான் அதைப் பார்த்திருக்கிறேன். லண்டனி அலுள்ளதைப் பார்க்கிறபோது அதன் கினைவு வந்தது.

லண்டனில் பல அன்பர்களின் நட்பு எனக்குக் கிடைக் தது; பல தமிழர்களின் உதவியைப் பெற்றேன். திரு சிவசுப்பிரமணியன் என்ற அன்பரைப் பற்றித் தனியே சொல்ல வேண்டும். அவர் இலங்கையில் உள்ள கரவெட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். லண்டனில் பல ஆண்டு களாக இருக்கிரு.ர். மார்க்கோனி கம்பெனியில் வேலை பார்க் கிருர். அவருக்குத் தமிழ் மொழியையும் நம் நாட்டுக் கலை களையும் பற்றி இங்கிலாந்தில் உள்ளவர்கள் நன்கு அறிய வேண்டும் என்று ஆசை. அப்போது கலைமகளுக்குப் பிரதி நிதியாக இருந்தார். நல்ல உத்தியோகத்தில் இருக்கும் அவருக்கு இதல்ை லாபம் ஒன்றும் இல்லை. ஆலுைம் கல்ல தமிழ் பரவ வேண்டும் என்ற விருப்பத்தால் கலைமகளை

வாங்கி விற்பனை செய்தார்.