பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கோட்டையும் கொலைக்களமும்

மெழுகுச் சிற்ப மாளிகையைக் கண்ட அன்று

(23-7-70) இந்தியத் தூதுவர் காரியாலயத்தில் உள்ள

இந்தியா மாளிகைக்குச் சென்ருேம். பழங்காலத்தில் இங்கியா மந்திரி என்றே தனியாக ஒரு மந்திரி இருந்தார். பிரிட்டிஷ் மந்திரி சபையில் இந்தியா சம்பந்தமான

எல்லா விஷயங்களையும் கவனிப்பவர் அவர். பிரிட்டிஷ்

சாம்ராஜ்யத்தின் முடிமணியாக இந்தியா விளங்கிய காலம் அது. அந்த மந்திரி தம் அலுவலகத்தைத் தனியே ஒரு மாளிகையில் இருந்து கடத்தி வந்தார். 1930ஆம் ஆண்டில் இந்த இந்தியா மாளிகை கட்டப்பெற்றது. அதுவே இப் போது இந்தியத் தூதுவராலயமாக விளக்குகிறது. மேல் நாட்டுச் சிற்ப முறையும் கீழ்நாட்டுச் சிற்ப முறையும் இணைந்து அமைந்த பெரிய மாளிகை இது.

இப்போது இங்கே எழுநூறு பேருக்கு மேற்பட்ட இந்தியர்கள் வேலை செய்கிருர்கள். அவர்களில் தமிழர் குறைவு. வாணிபப் பகுதியில் பணிபுரியும் திரு வேத நாராயணன் என்பவர் ஒய். எம். சி.ஏ.க்கு வந்து என்னை யும் பிறரையும் பார்த்தார். அவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருச்சி, தேசியக் கல்லூரியில் படித்தவர். என்னையும் அன்பர் திரு சா. கணேசனையும் இந்தியா மாளிகைக்கு அழைத்துச் சென்ருர். அங்கே பணியாற்றும் சிலரை அறிமுகப்படுத்தினர். பொதுமக்கள் கதாடர்பு அதிகாரியாக இருந்த திரு சிவராமகிருஷ்ணனைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சென்னையில் ஹிந்துப்