பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டையும் கொலைக்களமும் 207

பத்திரிகையில் சில காலம் ஆசிரியர் குழுவில் இருந்து பணி யாற்றினவராம். .

அங்கே வெவ்வேறு பகுதிகள் இருக்கின்றன. இந்தியா விலிருந்து வந்த ஆண்களும் பெண்களும் வேலை செய் கிருர்கள். மிகப் பெரிய செலவில் இந்தத் தூதுவராலயம் நடைபெற்று வருகிறது. இங்கே சேவகர்கள் என்ற இனமே இல்லை. எந்தக் காரியாலயத்திலும் டவாலிச் சேவகர் இல்லை. பண்டங்களே இழுத்துக் கொண்டு செல்லும் பெல்ட்டுகள் (Conveyor Belts) இருக்கின்றன. அவற்றின் மூலம் அனுப்பவேண்டியவற்றை அனுப்புகிருர்கள். எந்தக் கட்டையாவது (File) வேறு ஒருவருக்குக் கொடுக்கவேண்டு மால்ை தாமே கொண்டு போய்க் கொடுக்கிருர்கள்; அல்லது அவர்களே வந்து வாங்கிக் கொள்கிருர்கள்.

இந்தியாவிலோ-: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காமல் இருப்பதை ஒவ்வோர் அலுவலகத் திலும் பார்க்கிருேம். சென்னே அரசினர் தலமைச் செயலகத்தில் போய்ப் பாருங்கள். ஏதேனும் ஒரு சிறிய உணவுத் துணுக்கு நீரில் விழுந்தவுடன் மீன்கள் மொய்த் துக் கொள்கின்றனவே, அதுபோல, ஒரு காரியமாக அந்தச் செயலகத்துச் செல்பவரைச் சேவகர்கள் மொய்த்துக் கொள்கிருர்கள். அந்தச் சில்லறைத் தேவதைகளைத் தாண்டிச் செல்வது அவ்வளவு எளிய காரியம் அன்று.

அன்பர் திரு வேதநாராயணன் லண்டனில் உள்ள சில சங்கங்களோடு தொடர்பு கொண்டிருக்கிருர். ஹிந்து மிஷனின் துணைத்தலைவர். லண்டனில் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்கிறது. அதிலும் அவருக்குத் தொடர்பு உண்டு.

இந்தியா மாளிகையில் உள்ள உணவுச் சாலைக்கு அவர் என்னேயும் திரு சா. கணேசனயும் அழைத்துச் சென்று தமிழ்நாட்டு உணவு உண்ணும்படி செய்தார்.

-øsör p 19 busa3á avairu–gör Lair (Tower of London) என்ற இடத்துக்குப் போய்ப் பார்த்தோம் எந்த இடத்