பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டையும் கொலைக்களமும் 209

இது அரண்மனையாகவும் இருந்திருக்கிறது. நான யங்கள் அச்சிடும் அக்கசாலையாகவும் இருந்ததுண்டு. கடைசியாக இங்கே வாழ்ந்த மன்னர் முதலாம் ஜேம்ஸ். "இங்கே மணிக் கோபுரம் (Bell Tower) என்ற இடம் ஒன்று இருக்கிறது. அங்கே பலர் சிறையில் இருந்து மரண தண்டனை பெற்றிருக்கிருர்கள். மிகப் புகழ்பெற்ற முதலாம் எலிஸபெத் அரசி அரசகுமாரியாக இருந்தபோது இங்கே ஆறு மாதம் சிறையிருந்தாளாம். பிறகு அவள்மேல் குற்றம் ஏதும் இல்லையென்று தெரிந்து அவளே விடுவித்து விட்டார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் இங்கிலாந்தின் அரசி ஆள்ை.

இங்கே குருதிக் கோபுரம் (Bloody Tower) என்ற பகுதி ஒன்று இருக்கிறது. அந்த இடம் பல பேரைக் கொன்ற கொலைக்களம். முதலில் இதைத் தோட்டக் கோபுரம் (Garden Tower) என்று வழங்கினர்கள். பிறகு பல கொலைகள் நடந்த இடமாதலின் குருதிக் கோபுரம் என்ற பெயர் உண்டாயிற்று. ஐந்தாம் எட்வர்டும் அவருடைய தம்பி ரிச்சர்டும் இங்கே கொலேயுண்டனர். பல மத குருமார்கள் இங்கே உயிரை இழந்தார்கள்.

ஸ்ர் வால்டர் ராலே பதின்மூன்ருண்டுகள் இங்கே சிறைப்பட்டிருந்தார். ஆனல் இங்கே பல விஞ்ஞானப் பரிசோதனைகளே நடத்தினர். உப்புத் தண்ணிரிலிருந்து நல்ல தண்ணிரைப் பிரித்தெடுக்கும் முறையை அவர் கண்டுபிடித்தாராம். உலக வரலாறு' என்ற பெரிய நூலே அவர் இங்கே சிறையிருந்தபோது எழுதினராம். அது 1614ஆம் ஆண்டு வெளியாயிற்று. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் அவர் தலையை வெட்டிக் கொன் ருர்கள். அவர் எழுதிய நூலின் பழம் பிரதி ஒன்றை இங்கே காட்சியில் வைத்திருக்கிருர்கள்.

இந்தக் கோட்டையின் நடுவில் இருப்பது வெள்ளைக் Gârlsruh grairp solo th (The White Tower). Q.g. 90 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அமைப்பு. இதன்

கண்டறி-14