பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கண்டறியாதன கண்டேன்

சுவர்கள் அடியில் 15 அடி அகலமும் மேலே 11 அடியும் உள்ளன. இந்த இடத்தில் இங்கிலாந்தின் இடைக்கால அரசர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய அத்தாணி மண்டபமும் இங்கே இருந்தது. மேல் மாடியில் அரச குடும்பம் வாழ்ந்தது. கீழ்த்தளத்தில் அரசவை இருந்தது. இப்போது இந்தப் பெரிய இடத்தில் பலவகையான படைக் கலங்களைச் சேகரித்து வைத்திருக்கிருர்கள்.

எட்டாவது ஹென்றி அரசர் (1512) காலம் முதல்

1914ஆம் ஆண்டு வரையில் படைக்கலங்களும், கவசங்களும்

எவ்வாறு மாறியும் பலவகை உருவெடுத்தும் வளர்ந்து’ வந்திருக்கின்றன என்பதை இங்குள்ள காட்சிப் பொருள் கள் காட்டும். இங்கே பல காலத்துப் படைக்கலங்களும் பல நாட்டு ஆயுதங்களும் இருக்கின்றன. பழங்காலத்து ஈட்டிவகைகள், வேல்கள், வாள்கள், கவசங்கள் குதிரை யின் கவசம் முதலியவற்றை இங்கே காணலாம். துப்பாக்கி களும் இருக்கின்றன. மாமன்னர்கள் அணிந்திருந்த பெரிய இரும்புக் கவசங்களின் விவரங்களைக் குறிப்பிட்டு வைத்திருக்கிரு.ர்கள்.

கொலை செய்யும் பட்டடை ஒன்று ஒரு சிறிய இடத்தில் இருக்கிறது. இங்கே தலையைத் துணிக்கும் கோடரியையும் வைத்திருக்கிருர்கள். கொலேக்களப்பட்டடையில் கழுத்தை வைத்தவுடன் அந்தக் கோடரியால் கொலையாளி ஒரு போடு போடுவான். தலை தறிக்கப்பட்டுச் சிறிது தூரம் போய் விழும். இந்த இடத்தைப் பார்த்தபோது என் உடல் நடுங் கியது. அரசச் செல்வம் என்று வானளாவப் புகழ்கிருேம். பிறருக்குக் கிடைக்காத இன்ப வாழ்வு வாழ்ந்த அரசர்கள் ஆடு மாடுகளைப் போலத் தலை துணிக்கப்பட்டார்கள் என்பதை எண்ணும்போது, 'என்ன நாகரிகம் இது!" என்றே தோன்றுகிறது. அந்த அரச போகமும் வேண்டாம்; இப்படி உயிரை விடவும் வேண்டாம். இங்கே தலை துணிக் கப்பட்ட அறுவர்களின் பெயர்களே ஒரு பலகையில் எழுதி வைத்திருக்கிருர்கள்.