பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龙】4 கண்டறியாதன கண்டேன்

அன்பர் திரு சிவசுப்பிரமணியமும் அவருடைய நண்பர் திரு குலசிங்கமும் 24-7-70 அன்று ஆக்ஸ்போர்டு போய் வரலாம் என்று சொல்லியிருந்தார்கள். அன்பர் குலசிங்கம் ஓர் அழகான கார் வாங்கியிருந்தார். அதை அவர் கொண்டு வந்தார். நண்பர் திரு சா. கணேசனுடன் அந்தக் காரில் எறிப் புறப்பட்டோம். வேகமாகப் போவதற்காகவே ஒரு சாலை இருக்கிறது. அந்தச் சாலை வழியே ஆக்ஸ்போர்டை அடைந்தோம்.

தேம்ஸ் நதியும் ஷெர்வெல் என்ற ஆறும் கலக்குமிடத் துக்கு முன் ஆறுகளின் இடையில் அழகிய குழ்நிலையில் ஆக்ஸ்போர்டு விளங்குகிறது. ஆக்ஸ்போர்டை யாரோ ஒருவர் கோதீர்த்தபுரி என்று எழுதியதை எங்கோ படித்திருக்கிறேன், ஆற்றில் இறங்கி நடக்கும் துறைக்கு Ford என்று பெயர். மாடுகள் இறங்கு துறை அருகில் இருப்பதால் ஆக்ஸ்போர்டு என்று பெயர் வந்ததாம்.

உலகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் மிகப் புகழ் பெற்றவை இரண்டு; ஒன்று ஆக்ஸ்போர்டு; மற்ருென்று கேம்பிரிட்ஜ். இரண்டும் இங்கிலாந்தில்தான் இருக்கின்றன. ஆக்ஸ்போர்டில் பல கல்லூரிகள் இருக்கின்றன. அவை யாவும் இணைந்த அமைப்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம். உலகப் புகழ்பெற்ற பல மேதாவிகளும் அரசியல் தலைவர் களும் இந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள்.

ஆக்ஸ்போர்டு லட்சம் பேர் வாழும் சிறிய நகரம். இங்கே பத்தாயிரம் மாணவர்கள் பல கல்லூரிகளிலும் பயில்கிருர்கள். உலகத்தில் உள்ள எல்லா காடுகளிலு: மிருந்து மாளுக்கர்கள் இங்கே வந்து கல்விப் பயிற்சி பெறுகிரு.ர்கள்.

பதின்மூன்ருவது நூற்ருண்டிலேயே இந்தப் பல்கலைக் கமுகம் உருவாகத் தொடங்கியது. யூனிவர்ளிடிக் காலேஜ் 1249ஆம் ஆண்டில் ஆரம்பமாயிற்று. பேலியல் கல்லூரி 1262இல் தொடங்கியது. மர்ட்டன் கல்லூரி 1264இல்