பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கண்டறியாதன கண்டேன்

விடுமுறைப் பருவம் ஆகையால் மானக்கர்கள் வெளியூர் சென்றிருந்தார்கள்: க. ல் லூ ரி க ள் நடைபெறவில்லை. ஆனாலும் உள்ளேபோய் வகுப்பறைகள், நூலகம் புல்வெளி, தோட்டம் முதலியவற்றைப் பார்க்க முடிந்தது. இங்கே படித்தவர்கள் பெரிய பாக்கியசாவிகள் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை என்ற எண்ணத்தை அங்கிருந்த சூழ்நிலை காடடியது.

பாட்லியன் நூலகம் என்ற பெரிய நூல் கிலேயம் ஒன்று ஆக்ஸ்போர்டு மாநகரின் மத்தியில் உள்ள ராட்க்ளிப் காமெரா என்ற அழகிய மாளிகையைச் சார்ந்து இருக்கிறது. ஸ்ர் தாமஸ் பாட்லி என்பவர் இங்குள்ள மக்தலேன் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். அவர் 1598இல் இந்த நூலகத்தை உருவாக்கினர். அங்குள்ள சில பகுதி களைப் போய்ப் பார்த்தோம். புகழ்பெற்ற பெரிய ஆசிரியர் களுடைய கையெழுத்துப் பிரதிகளே அங்கே பாதுகாத்து வைத்திருக்கிருர்கள். அச்சுப் புத்தகங்களும் ஏராளமாக இருக்கின்றன.

முதலாவது ஜேம்ஸ் மன்னர் இங்கே வந்தாராம்: இங்குள்ள அமைப்புக்களேயெல்லாம் பார்த்தார்: "நான் மன்னகை இல்லாமல் இருந்தால் இங்கே வந்து தொண்டு புரிவேன்' என்று சொன்னராம். மன்னர் பதவியை விடக் கல்வித் தொண்டு புரியும் மேதைகளின் பதவி சிறந்த தல்லவா? "மன்னனிற் கற்ருேன் சிறப்புடையன்' என்று தெரியாமலா சொன்னர்கள்? அந்த மன்னர் தம்மிடமுள்ள நூல்களேயெல்லாம் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வழங்கி விட்டார்.

நூலகத்தில் உள்ள நூல்களை யாரும் வெளியிலே எடுத்துச் செல்லக் கூடாது. இந்த விதி மிகவும் கடுமையானது யாரும் மீற முடியாதது. இங்கே வந்து தங்கிப் படித்துச் செல்லலாம், முதலாம் சார்லஸ் அரசரும் ஆலிவர் கிராம்வெலுங்கூட இங்கே வந்துதான் படித்துச் சென்ருர்கள் விதியென்ருல் எல்லாருக்கும் விதி