பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.220 கண்டறியாதன கண்டேன்

இங்கே பயிலும் மாணவர்கள் கார் வைத்திருக்கிருர்கள். எங்கும் கார்கள் உலாவிக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நகரிலேயே கார் உற்பத்திச் சாலை ஒன்று இருக்கிறது.

இங்கே பயிலும் மாளுக்கர்கள் வெறும் நூற்கல்வியை மட்டும் கற்றுக் கொள்வதில்லை: மனிதர்களோடு பழகும் முறையை. பண்பாட்டை, சமய உணர்வை, அன்பை, உண்மையான நாகரிகத்தைக் கற்றுக் கொள்கிருர்கள். அவர்களே நல்ல மனிதர்களாகவும் சிறந்த அறிஞர்களாகவும் உருவாக்கும் பணியில் இந்தப் பல்கலைக் கழகம் முன்னணி யில் கிற்கிறது.

இராமன் பெருமையை ஜனகமன்னனிடம் சொல்லவந்த விசுவாமித்திர முனிவர், 'இராமனைத் தசரதன் பிள் அள என்றேன்; அது வெறும் பெயர் மாத்திரம். இவனுக்கு மறை முதலிய கலைகளைக் கற்பித்து உண்மையில் வளர்த் தவன் வசிட்ட மாமுனி' என்கிருர். -

திறையோடும் அரசிறைஞ்சும்

செறிகமுற்கால் தயரதனும் பொறையோடும் நெடுங்தோளான்

புதல்வனெனும் பெயரேகாண்; உறையோடும் நெடுவேலாய்,

உபநயன விதிமுடித்து மறையோது வித்திவனே

வளர்த்தானும் வசிட்டன்காண்' என்பது கம்பன் பாட்டு. தசரதன் பிள்ளே என்பதைவிட வசிட்ட முனிவரின் மானக்கன் என்பதுதான் இராமனுக்கு அதிகப் பெருமை தருவது. அதுபோல எந்தக் குலத்தில் பிறந்தாலும் எத்தகைய செல்வவளம் உடையவனாக இருந் தாலும் பெருத மதிப்பை ஆக்ஸ்போர்டில் படித்தவன் என்பதல்ை பெறலாம் என்றே தோன்றுகிறது.

அந்தக் கல்வித் திருநகரை வாழ்த்தி வணங்கிவிட்டு -லண்டனுக்கு மீண்டோம்.