பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 லண்டரிைல் தமிழ் ஓசை

லண்டனில் தமிழ்ச் சங்கம்; லண்டனில் தமிழ்ப் பத்திரிகை: லண்டனில் சைவ மன்றம்; லண்டனில் தமிழ்ப் படம்.

இந்தச் செய்திகளைக் கேட்டால் நம் காட்டில் உள்ள வர்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களைக் கண்டவர்களுக்கு வியப்பு உண்டா காது. தமிழர்கள் எங்கே குடியேறினலும் சரி; அது வட நாடு ஆலுைம், உலகத்தில் வேறு நாடுகளாக இருந்தாலும். அங்கெல்லாம் தம்முடன் தமிழையும் சமயத்தையும் கொண்டு போகாமல் இருக்கமாட்டார்கள். அங்கும் திரு. விழா உண்டு, இசை உண்டு, பரத நாட்டியம் உண்டு. இட்டிலி உண்டு. தோசை உண்டு, சண்டையும் உண்டு.

ஆகவே, லண்டனில் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்கிற தென்ருல் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. காங்கள் போனபோது அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திரு மெய்யப்பன் என்பவர். அவர் பாரிஸில் கடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்திருந்தார். அவர் செட்டி காட் டைச் சேர்ந்தவர்.

"லண்டன் முரசு' என்ற மாதப் பத்திரிகை ஒன்று கடக்கிறது. 1970 ஆம் ஆண்டு ஜூலை இதழை மூன்ருவது உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பிதழாக வெளியிட்டார்கள். அதன் கெளரவ ஆசிரியர் திரு ச.ம. சதானந்தன். அவர்