பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டனில் தமிழ் ஓசை 225.

போர்டு போய் வந்தோம். அன்று மாலையில் அன்பர் திரு சபாபதி பிள்ளேயும் பிறரும் முன்பு சொன்ன இரண்டு சங்கங்களின் ஆதரவில் விம்பிள்டன் என்ற பகுதியில் உள்ள லிட்டில் ஹால் (Little Hall) என்ற இடத்தில் ஒரு கூட்டத்தைக்கூட்டினர்கள். முன்கூட்டியே அழைப்பை அச்சிட்டு அன்பர்களுக்கு வழங்கியிருந்தமையால் பல தமிழர்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்தார்கள். முதலில் பூஜை நடைபெற்றது. கூட்டத்துக்குத் திரு சபாபதிபிள்ளே தலைமை தாங்கினர். அன்பர் திரு சா. கணேசன் முதலில் பேசினர். தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ்நாட்டுக் கோயில்களையும் பற்றிப் பேசினர். 'தமிழன் அறிந்த கலைகள் யாவும் ஆலயத்தை ஒட்டியே வளர்ந்து வந்திருக் கின்றன. இசை, நடனம், சிற்பம், இலக்கியம் என்ற பல கலைகளேயும் வளர்த்து வந்த பல்கலைக் கழகங்கள் அவை என்றே சொல்லலாம். ஒரு கோடீசுவரன் வீட்டில் கூட நாகசுரம் தினமும் ஒலிப்பதில்லை; விசேஷ காலங்களில் தான் கேட்கலாம். ஆல்ை தமிழ்நாட்டு ஆலயங்களில் காள்தோறும் நாகசுர இசையைக் கேட்கலாம். கோயில் களில் கல்விக்கூடங்கள் இருந்தன. நீதி மன்றங்கள் இருந்தன. காட்டு நடப்புகளையும் அரசர்களின் வரலாறு களையும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் கோயில்களில் ஏராள மாக இருக்கின்றன என்று கூறி அவற்றை விளக்கினர். பிறகு கம்பனுடைய பெருமையை எடுத்துரைத்தார்.

பிறகு திரு ரா. நாகசாமி பேசினர். கோயில்கள் காளடைவில் வளர்ந்து வந்த வரலாற்றை அவர் சொன்னர். 'பழங்காலத்து மன்னர்கள் கோயில் கட்டுவதைத் தம் முடைய கடமையாகக் கொண்டிருந்தார்கள். ஊர்தோறும் கோயில் இருக்கிறது. 'திருக்கோயில் இல்லாத திரு இல் ஊர்' என்று அப்பர் பாடுகிருர். அவர் கோயிலில் உழவாரத் தொண்டு செய்தார். அது சிறந்த சமுதாயத் தொண்டு. அரசர்கள் தம் முன்னேரின் கினைவாகக் கோயிலைக் கட்டி ஞர்கள். வெற்றிச் சின்னமாகச் சிலவற்றைக் கட்டினர்கள். இறந்த பெரியவர்களுக்குப் பள்ளியெடுத்தார்கள். கங்க

கண்டறி-15,