பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கண்டறியாதன கண்டேன்

நூல்களில் இத்தகைய பள்ளிகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. எங்கும் பரந்திருக்கும் தெய்வ சக்தியை அம்மையும் அப்பனுமாக வைத்து வழிபட்டார்கள். இசை முதலிய கலைகளே ஆண்டவனுக்கு அர்ப்பித்தார்கள். சிற்பக் கலை கோயில்களில் வளர்ந்தது. வீட்டு அமைப்பு. கோயில் அமைப்பு, சிலேகளின் அமைப்பு ஆகியவற்றை வரையறுக்கும் நூல்கள் இருக்கின்றன. கோயில்களைச் சார்ந்து மருத்துவச்சாலை இருந்தது. அதை ஆதுலர் சாலை என்று கூறினர். இத்தனே படுக்கைகள், இவ்வளவு நோயாளிகள் முதலிய வரையறைகளைச் செய்திருந்தார்கள். கல்வெட்டுக்களிலிருந்து இவற்றை அறியலாம்' என்று பேசினர். f }

இலங்கையிலிருந்து பாரிஸ் மாநாட்டுக்கு வந்திருந்த அறிஞர்களில் இருவர் அந்தக் கூட்டத்தில் பேசினர். திரு கமாலுதீன் என்னும் பேராசிரியர் முஸ்லிம்கள் தமிழ் மொழிக்குச் செய்த பணிகளைப் பற்றிப் பேசினர். அவர்கள் இயற்றிய பல நூல்களேத் தமிழ் அறிஞர்கள் படிக்கிறதில்லை என்ருர். 'இலங்கையில் கீழ் மாகாணமாகிய மட்டக் களப்பில் உள்ள முஸ்லிம்கள் தமிழ் மொழியையே தாய் மொழியாக உடையவர்கள். அவர்களில் பல தமிழ்ப் புலவர்கள் உண்டு என்று கூறினர்.

அவரை அடுத்துப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் திரு கலாநிதி வித்தியா னந்தன் பேசினர். அவர் உலகம் முழுவதும் தமிழ்க் கலைகளும் பண்பாடும் பரவியிருந்தன என்பதற்குரிய, ஆதாரங்களை எடுத்துரைத்தார். பிலடெல்பியாவில் சிவபிரானுடைய உருவச் சிலேயும், கோபென்ஹாகனில், நடராஜர் சிலையும் இருப்பதைச் சொல்லித் தாய்லந்தில் இருப்பாவை திருவெம்பாவை விழா கடப்பதையும் சொன்னர், தமிழ் மொழி எல்லாச் சமயங்களையும் போற்றி வளர்த்த மொழி என்றும். பெளத்தம், சைனம், சைவம்