பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கண்டறியாதன கண்டேன்

', 'இப்போது லண்டன் மாநகருக்கு வந்தோம். பாரிஸ் மாநகரத்தில் கலைக் குவியல்களேயும் மாளிகைச் சிற்பங் :ே களையும் புலவர்களுக்கு அமைந்த சிலகளேயும் கண்டு வியந்தோம். தமிழ் நாட்டிலும் இத்தகைய கலை வளத்தையும் புலவர்களுக்கு மதிப்புத் தருவதையும் காணும் காலம் வருமா என்று அங்கலாய்த்தோம். இது கந்தர்வ லோகம் என்று மயங்கி அதிசயித்து கின்ருேம். லண்டனில் கால் வைத்தவுடன் நண்பர் கணேசன், "சிற்றப்பன் வீட்டிற்கு வந்திருக்கிறது போல இருக்கிறது’ என்று சொன்னர் பாரிஸ் நகரத்துக்கும் இதற்கு முன் வந்ததில்லை; லண்டனுக்கும் காங்கள் வந்ததில்லை. ஒரு வாரத்துக்குமேல் பாரிஸ் நகரத்தில் இருந்தும் அது புதுமை யாகவே தோன்றுகிறது. லண்டனே காங்கள் முன் வந்திராத புதிய கக்ரமாக இருந்தாலும் எங்கள் உளக் கண்ணிலே கண்ட நகரமாகத் தோன்றுகிறது. புத்தகங் களிலே பல படியாகப் படித்தும், இங்கிருந்து வந்து ஆண்ட ஆங்கிலேயரோடு பழகியும். ஆங்கில இலக்கியக் கருவூலங்களில் ஈடுபட்டும், அந்த மொழியைக் கேட்டும் பேசியும் பழக்கம் இருப்பதல்ை இது சொந்த ஊரைப் போலத் தோன்றுகிறது. நாம் பழகிய சோறு இங்கே இல்லை; நாம் பழகிய உடை இங்கே இல்லை; நமக்குப் பழக்கமான ஆண்களும் பெண்களும் வீதியில் உலாவவில்லை. ஆயினும் இங்கே கம் உள்ளம் ஒன்றுவதற்குக் காரணம் நம் காதில் விழும் ஓசை நமக்கு விளங்குகிறதுதான்.

'மனிதன் பெற்ற பெரு வரம் மொழி. அவன் ஒருவன்தான் வாயுள்ள பிராணி. பெரிய வாயையுடைய காண்டாமிருகங்கூட வாயில்லாப் பிராணிதான். பேசும் வாய்தான் வாய். மனிதன் பேசும் ஆற்றல் பெற்றிருக்கிருன். ஒருவளுேடு ஒருவன் பேசியும் கேட்டும் மகிழ்ச்சி அடைகிருன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிருன். அவன் வாயிலிருந்து வரும் ஒலி நமக்கு விளங்காவிட்டால் எவ்வளவு சுெருங்கியிருந்தாலும் நம்முடைய ஊரில் இருப்பது போன்ற உணர்வு இராது.