பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கண்டறியாதன கண்டேன்

"தமிழும் சைவமும் என்ற பொருள் பற்றிப் பேச வேண்டு மென்று தலைவர் பணித்தார். சிவம் என்பது மங்கலம் என்றும், மங்கலம் வேண்டாதார் யாரும் இல்லை என்றும் தொடங்கிச் சங்க நூல்களில் சிவபெருமானப் பற்றி வந்துள்ள செய்திகளை எடுத்துரைத்தேன். அங்குள்ள வர்கள் முருகனிடத்தில் ஈடுபட்டவர்கள். முருகன் படத்தை வைத்து முதலில் பூஜை செய்தார்கள். ஆதலால் சங்க நூல்களில் ஒன்ருகிய திருமுருகாற்றுப்படையைப் பற்றிப் பேசினேன். முருகன் அழகுத் தெய்வம் என்பதைச் சொன்னேன். நக்கீரர் காட்டும் இயற்கை வளத்தை எடுத்துரைத்தேன்.

அங்கே காங்கள் பேசியதையெல்லாம் டேப் ரிகார்டரில் பதிவு செய்தார்கள். என் பேச்சைப் பிரதி செய்து அனுப்பி யிருக்கிருர்கள். அப்பேச்சு முழுவதையும் இங்கே சொல்வது அவசியம் அன்று.

பொதுவாகக் கூட்டத்தினருக்குப் பெரு மகிழ்ச்சி. ஐந்து தமிழர்கள் சேர்ந்தாற் போல் அந்தக் கூட்டத்தில் பேசியது அவர்களுக்குப் பெரிய செல்வத்தைக் கண்டது போல இருந்தது. -

கூட்டம் நிறைவேறியவுடன் எல்லோருக்கும் தயிருஞ் சாதம் பிரசாதமாக அளித்தார்கள். அதைப் பெற்று உண்டபோது, எங்கோ பல ஆயிரம் மைல்கள் கடந்து சென்று அயல் காட்டில் அயல் ஊரில் இருக்கிருேம் என்ற கினைவே மறந்து போயிற்று. ஏதோ பஜனை மண்டபத்தில் கின்று பிரசாதத்தை உண்பது போன்ற அநுபவமே உண்டாயிற்று. தமிழோசை செய்த மாயம் அது!