பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 கண்டறியாதன கண்டேன்

எதை யார் எடுத்தாலும் மேலாளருக்குத் தெரிந்துவிடும் டெலிவிஷன் அமைப்பு ஒன்றை அப்படிப் பொருத்தி. யிருக்கிருர்கள். நாம் எங்கெங்கே எப்படி எப்படி நடந்தாலும். தெரிந்துகொள்ளும் கடவுளேப்போல அவர்களுக்கு எல்லாம் தெரியும்.

மேல்தளத்தில் கு ழ ங் ைத க ளு க் கு வேண்டிய பொம்மைகள், விளையாட்டுப் பண்டங்கள், ஆடைவகைகள் எல்லாம் விற்கிருர்கள். அடுத்த கீழ்த்தளத்தில் பெண் களுக்குத் தேவையான பண்டங்கள். அந்தப் பகுதி இந்திரனுடைய அந்தப்புரமோ என்று எண்ணும்படி, கவர்ச்சிப் பொருள்களின் கொள்ளையாகக் காட்சி யளிக்கிறது. அடுத்த கீழ்த்தளத்தில் ஆண்களுக்கு உரியவை விற்பனை ஆகின்றன. அதற்கும் கீழே பலவகைப் பண்டங்களே விற்கிருர்கள். அங்கே போனபோது, நாங்களே குழந்தைகளாகி விட்டோம். எல்லாவற்றையும் நாள் முழுவதும் சுற்றிச் சுற்றி வேடிக்கை பார்க்கத் தோன்றியது. எஸ்கலேட்டர்களில் ஏறுவதும் இறங்குவதும் சுகமாக இருந்தன. -

"இன்றைக்கு எந்த இடத்துக்குப் போகலாம்?' என்று. அன்பர் நாகசுப்பிரமணியன்னக் கேட்டேன். "சிற்பங்கள், சித்திரங்கள் உள்ள இடமாகச் சொல்லுங்கள்” என்ருர், அன்பர் சா. கணேசன். - -

"அப்படியானல் விக்டோரியா ஆல்பர்ட் மியூஸியம் போகலாம். அங்கே கால அடைவில் தனித் தனியாகச் சிற்பங்களைப் பிரித்து வைத்திருக்கிருர்கள்' என்ருர் கணபா. -

விக்டோரியா ஆல்பர்ட் மியூஸியம் தென் கென்ஸிங்டன் என்ற இடத்தில் இருக்கிறது. குழாய் ரெயில் வழியே அந்த இடத்துக்குப் போைேம். போளுேம், வந்தோம் என்று சொல்லலாமே ஒழிய, போனேம், பார்த்தோம் என்று சொல்ல முடியாது. எதை என்று பார்ப்பது: