பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளையா, பரிசா? 239;.

சாதம், தயிருஞ் சாதம், அப்பளம், குழம்பு, ரஸம் எல்லாம்

பண்ணி ஜமாய்த்திருந்தார். விக்டோரியா ஆல்பர்ட்

மியூளியத்தில் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்ததனல்

கால்வலியும் நல்ல பசியும் உண்டாயிருந்தமையால் அந்த

உணவைச் சுவைத்து உண்டோம். அங்கே உள்ள பலர் இப்படிச் சமையல் பண்ணிச் சாப்பிடுவதாகத் தெரிந்தது.

அதில் அவர்களுக்கு ஒருவகையான இன்பம் இருக்கிறது.

அது மட்டுமா? எங்களைப் போல அவர்கள் காட்டிலிருந்து விருந்தினர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு ஒரே

கொம்மாளம்.

உழைப்புக்கு மதிப்புத் தரும் நாடு அது. வேலையில் இழிந்தது, உயர்ந்தது என்ற வேறுபாடு கிடையாது. தம் சொந்தக் காரியங்களைத் தாமே கவனித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிருர்கள். பிறர் கையை எதிர்பார்ப்பது நோயாளிக்குரிய இலக்கணம் என்ற உணர்வுடையவர் களாக இருக்கிரு.ர்கள். அங்கே போய்விட்டால் கால் கன்ருக கடக்கிறது.: ஆம், இங்கே குறுகிய தூரத்துக்குக் கூட ரிக்ஷாவும் டாக்ளியும் வைத்துக்கொண்டல்லவா போகிருேம்? கை, மூட்டை சுமக்கிறது: இங்கே ஒரு சிறிய கைப்பெட்டிக்குக் கூடக் கூலியாளே காடுகிருேம். அங்கே அலுவலகங்களில் "பியூன்” என்ற சாதியே இல்லையென்று முன்பே சொல்லியிருக்கிறேன். அல்லவா? அங்கே சமைப்பதும் ஒரு கலை; அதைச் சாப்பிட்டு ரசிப்பதும் ஒரு. கலைதான். -