பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம் படைக்கும் திருக்கோயில் 241

இருக்கின்றன அல்லவா? அங்கே மேல் சபையாகிய செல்வர் சபையில் மதகுருக்களும் பரம்பரை பரம்பரையாக வந்த செல்வம் படைத்தவர்களும் இருக்கிருர்கள். பொது மக்கள் சபையில் 630 அங்கத்தினர் இருக்கிருர்கள். பார்லி மெண்டு அங்கத்தினர்கள் 5 ஆண்டுகள் பதவி வகிப் பார்கள். ஒவ்வோர் ஐந்தாண்டு முடிவிலும் பார்லி மெண்டுக்குத் தேர்தல் நடைபெறும்.

பொதுவாகப் பார்லிமெண்டின் முதல் கூட்டம் நவம்பர் மாதம் தொடங்கும். அப்போது அரசியார் தொடங்கி வைத்துப் பேருரை ஆற்றுவார். பார்லிமெண்டின் ஒவ்வொரு கூட்டமும் கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் நடைபெறும். ஒவ்வொரு நாள் கூட்டத்தின் தொடக் கத்திலும் கடவுள் வாழ்த்து உரியவர்களால் படிக்கப் பெறும்.

மக்கள் சபை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரையில் நடைபெறும். மேல் சபையும் அப்படித்தான்; சில சமயங்களில் திங்கள் வெள்ளிகளில் மேல் சபை கூடுவதில்லை.

திங்கள் முதல் வியாழன் வரையில் ஒவ்வொரு சபையிலும் பிற்பகலில் முதல் நிகழ்ச்சியாக இருப்பது கேள்வி நேரம். இந்த நிகழ்ச்சி மிகவும் சுவையாக இருக்கும். உறுப்பினர்கள் பல வகையான கேள்விகளைக் கேட்டார்கள்; அவற்றிற்கெல்லாம், உரிய மந்திரிகள் விடை கூறுவார்கள். முக்கால் மணி நேரம் இந்த வினவிடை கிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையும் வியாழக் கிழமையும் சரியாக 3-15 மணிக்குப் பிரதமர் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். கேள்விகளுக் குரிய பதில்களே அளிப்பதில் மந்திரிகள் மிகவும் கவனமாக இருப்பார்கள். உறுப்பினர்கள். மந்திரிகளே மடக்குகிற கேரம் இது அல்லவா?

மக்கள் சபைத் தலைவர் சபையின் ஒழுங்கைக் காப்பாற்றும் அதிகாரம் உடையவர். அவரே எந்த எந்த

கண்டறி-16