பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம் படைக்கும் திருக்கோயில் 243

இங்கே சிறிய மாளிகையே இருந்தது. நாளடைவில் இது பல பல பகுதிகளை உடைய பெரிய அரண்மனையாக வளர்ந்துவிட்டது. தேம்ஸ் நதிக் கரையில் மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. இது. இதன் பழமையை இதில் படிந்திருக்கிற புகை காட்டும். பழமையைப் பாது காக்கும் பாங்கு இங்கிலாந்தில் இருப்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு.

இந்த இடத்தில் பழங்காலத்தில் அரசர்கள் வாழும் மாளிகையும் அவர்கள் கொலு வீற்றிருக்கும் அரசவையும் திேயரங்கும் இங்கே இணைந்திருந்தன. அரசிக்குரிய அந்தப் புரமும் இருந்தது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அணி கலன்களும் விலையுயர்ந்த பண்டங்களும் அணிகலக் கோபுரம் (The Jewel Tower) என்ற இடத்தில் சேமிக்கப் பெற்றிருந்தன. அந்த இடத்தை 1365ஆம் ஆண்டில் கட்டினர்களாம். பிற்காலத்தில் பார்லிமெண்டில் உருவான சட்டங்களே எழுதி வைத்திருக்கும் கிழிச் சுருள்களைப் பாதுகாக்கும் இடமாக இருந்தது. இப்போது பொது மக்கள் இவ்விடத்தைப் போய்ப் பார்த்து வரலாம்.

16ஆவது நூற்ருண்டு வரையில் இந்த அரண்மனை அரச குடும்பத்தினர் வாழும் இடமாக இருந்தது. 1512ஆம் ஆண்டில் எட்டாம் ஹென்றி அரசர் தனியே இரண்டு அரண்மனைகளைக் கட்டிக் கொண்டு இந்த இடத்தினின்றும் சென்ருர். பிறகு இங்குள்ள பகுதிகளெல்லாம் பார்லி மெண்டோடு தொடர்புடைய பணிகள் கடக்கும் இடங்களாக மாறின. -

அரசர்கள் தம்முடைய உரிமைகளைக் காத்துக்கொள் வதில் கருத்தாக இருந்தனர். பார்லிமெண்ட் தன் உரிமையைக் காத்துக்கொள்ள முந்தியது. இதல்ை அரச ருக்கும் பார்லிமெண்டுச் சபையினருக்கும் இடையே கடுமை யான சச்சரவு உண்டாயிற்று; போரே மூண்டது. கடைசி யில் 1689ஆம் ஆண்டில் வில்லியம் என்ற அரசகுமாரரை அரசராகச் செய்தது பார்லிமெண்ட்; பார்லிமெண்டே,