பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர்வ் நகரம் 贯9

திரு வேங்கடசுப்பிரமணியன், நான் ஆகிய நால்வரும் சிக்கன வகுப்பில் (Economy Class) வந்தோம். முதல் வகுப்பில் நறுமணப் பொருள்களும் மதுபானமும் விலை யின்றித் தருவார்களாம். எல்லா வகுப்புப் பிரயாணி களுக்கும் வேண்டிய உணவை விலையின்றி வழங்குவார்கள். கானும் மற்ற நண்பர்கள் மூவரும் எங்களுக்குச் சைவ உணவுதான் வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி விட்டமையால் அதை வழங்கினர்கள்.

பம்பாயை விட்டுப் புறப்பட்ட விமானம் டெல்லி சென்றது. அங்கே அரைமணி நேரம் கின்றது. நாங்கள் வெளியே போகவில்லை. அங்கிருந்து புறப்பட்ட விமானம் 31,000 அடி உயரத்தில் பறந்தது; சில சமயங்களில் 35,000 அடி உயரம் பறந்தது. மணிக்கு 540 மைல் வேகத்தில் சென்றது.

ஈரான், ஈராக், பர்ஸியா முதலிய இடங்களின்மேல் பறந்து சென்ருேம். அங்கெல்லாம் பல நூறு மைல்கள் பச்சையோ, தண்ணிரோ கண்ணில் படவில்லை. ஒரே மணற்காடு; பெரும் பாலே! -

மீண்டும் பெய்ரூத் (Beirut) என்ற இடத்தில் வான ஆர்தி இறங்கியது. நாங்கள் இறங்கி விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்தோம். வரியில்லாமல் சாமான்களை விற்கும் கடைகள் (Dutyfree Shops) அங்கே இருந்தன. விதவித மான கடியாரங்கள், பேணுக்கள், டிரான்ஸிஸ்டர்கள் முதலியவற்றைக் கடைகளில் விற்ருர்கள். நல்ல பேனவாக வாங்க வேண்டுமென்ற ஆசைதான். 'போகும்போது பணத்தைச் செலவழிக்கக்கூடாது; வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். பெய்ரூத் என்பது லெபனான் நாட்டின் தலைநகரம்.

அங்கிருந்து புறப்பட்ட விமானம் ஜெனிவாவில் இறங்கிச் சிறிது நேரம் கின்றது. ஸ்விட்ஜர்லாந்தில்