பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$244 கண்டறியாதன கண்டேன்

சட்டத்தைப் படைத்து அவற்றை வழக்கில் நிகழச்செய்யும் உரிமையையும் பெற்றது.

மக்கள் சபை அந்தக் காலத்தில் ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ். (3+Léo (St. Stephen's Chapel) aror/p Qu-āśā ol Qas go வழக்கம். அந்த இடம் சிறியது: 60 அடிக்கு 30 அடியே பரப்புள்ளது. ஆனல் மேலே மாடித் தாழ்வாரங்கள் இருங். தன. 18ஆம் நூற்ருண்டில் இந்த இடத்தில்தான் பிட், பர்க், பாக்ஸ் முதலிய சிங்கங்கள் முழங்கின. அந்தக் காலத்தில் பிரதமர்கள் பேச்சு என்ருல் அதன் தோரணையே வேறு; அழுத்தமும் ஆழமும் உடைய சொற்பொழிவாக இருக்குமாம். இப்போதெல்லாம் உரையாடல் பாணியில்: தான் அமைச்சர்கள் பேசுகிருர்கள். அப்பொழுதெல்லாம் ஜனத்தொகை குறைவு. வாக்குரிமை இவ்வளவு விரிவாக இல்லை. 1928ஆம் ஆண்டில்தான் பெண்களுக்கே வாக் களிக்கும் உரிமை கிடைத்தது.

1834ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இங்கே திப் பற்றிக் கொண்டதால் இந்த அரண்மனையில் சில இடங்கள் எரிந்து பாழாயின. அது ஒரு வகையில் நல்லதாயிற்று. புதிய முறையில் விரிவான கட்டடங்களே எழுப்புவதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது. அரசர்கள் வாழ்வதற்காக அமைத்த பகுதிகளேயே பார்லிமெண்டு நடைபெறும் இடமாகப் பயன்படுத்துவதில் எவ்வளவோ சங்கடங்கள் இருந்தன. அக்கினி பகவானுடைய திருவருளினல் அந்தச் சங்கடத்துக்கு ஒரு முடிவு உண்டாயிற்று. 1840ஆம் ஆண்டில் புதிய பார்லிமெண்டு மாளிகைக்கு அடிக்கல் காட்டினர்கள். மேல்சபைக்குரிய மாளிகை 1847இலும், மக்கள் சபைக்குரிய பகுதி 1850இலும் கட்டி கிறைவேறின. கடிகாரக் கோபுரம் 1858இல் கிறைவேறியது. இதில் உள்ள கடிகாரத்தையே பிக்பென் என்று சொல்வார்கள். பார்லிமெண்ட் தொடங்கும்போது அரசியார் புகும் முகப்புப் பகுதிக்கு விக்டோரியா கோபுரம் (Victoria Tower) என்று: