பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம் படைக்கும் திருக்கோயில் 245;

பெயர். உலகத்திலே மிக உயர்ந்ததும் பெரியதுமான கோபுரம் அது என்கிருர்கள். -

இவ்வாறு புதிதாக உருவாகிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ஆயிரம் அறைகளுக்குமேல் இருந்தன. நூறு :படிக்கட்டுகள் இருந்தன. எட்டு ஏகரா கிலப்பரப்பில்

அமைந்திருக்கிறது இது. -

1941ஆம் ஆண்டு மற்ருேர் விபத்து நேர்ந்தது. இரண்டாவது உலகப் பெரும் போர் நடந்த காலம் அது. மே மாதம் பத்தாம் தேதி பகைவர்கள் இந்த அரண்மனையின்மேல் குண்டுமாரி பொழிந்தனர். மக்கள் சபைப் பகுதிகள் எரியுண்டு அழிந்தன. பழையபடியே அந்த இடங்களை மறுபடியும் கட்டினர்கள். 1945 முதல் 1950 வரையில் புதிய கட்டடங்களைக் கட்டி முடித்தார்கள்: பின்பும் அங்கங்கே தேவைக்கு ஏற்பக் கட்டடங்கள் எழும்பு கின்றன.

லண்டனில் இந்தப் பிரம்மாண்டமான வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை ஜனநாயகத்தின் திருக்கோயிலாக, வரலாற்றைப் படைக்கும் அதிகாரபீடமாக, கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டான திருமாளிகையாக விளங்குகிறது.

அரண்மனையில் உள்ள சில பகுதிகளை இப்போது பார்க்கலாம் !

ஆடை அரங்கு (Robing Room) என்பது ஒரு பகுதி. பார்லிமெண்டைத் தொடங்கி வைக்கும்போது இங்கே அரசியார் எழுந்தருளி வந்து சம்பிரதாயமான உடைகளைப் புனைந்துகொள்வார்; முடியையும் அணிந்துகொண்டு புறப் படுவார். மிகவும் அழகான வேலைப்பாடுடைய அரங்கு

அரசியார் தம்முடைய பேருரையைப் படிக்கும்போ அமரும் சிங்காதனம் மிக அருமையான கலைநுட்பமுடையது. அந்த ஆசனத்கருகில் அரசியாருடைய கணவர் அமர் வதற்கும் தனியே ஓர் ஆசனம் உண்டு.