பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடி மன்னர் உறங்கும் இடம் 25E

புதைத்திருக்கிருர்கள். ஆலுைம் அது இடுகாடா புதைய லுள்ள இடத்தை நாம் எப்படிப் பாதுகாப்போம், அப்படி அதைப் பாதுகாக்கிருர்கள். அது வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும் இடம். மன்னர்களும் வீரர்களும் மந்திரி களும் கவிஞர்களும் கித்திய கித்திரையில் ஆழ்ந்திருக்கும் சாந்தி கிலேயம் அது. குருமார்கள் ஆட்சி செய்த மடாலயம் அது. கடவுளே கினேந்து தியானிக்கும் ஆலயம் அங்கே உண்டு. அரசர்கள் மணிமுடி குடும் சிங்காதனமும் அங்கே இருக்கிறது. முடி அணியும் மன்னருக்கும் இடம் கொடுத்து, முடிவிடம் தேடும் மன்னர்களுக்கும் இடங் கொடுக்கும் புனித மாளிகை அது. .

ஏழாவது நூற்ருண்டிலேயே வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே இருக்குமிடத்தில் மடாலயமோ சர்ச்சோ இருந்ததாம். வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அரசரும், வெஸ்ட்மின்ஸ் டர் அப்பேயில் மதகுருக்களும் இருந்து வந்தார்கள். அரச ருக்கும் சமயத் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. பதிருைம் நூற்ருண்டின் இடையில் அந்த அரண்மனே அரசர் வாழும் இடமாக இருப்பது மாறிப் பார்லிமெண்டுக்குரிய இடமாயிற்று. அதற்கருகில் கிர்வாகத்தை நடத்தும் பல அலுவலகங்கள் எழும்பின. அவற்றையே ஒயிட் ஹால் என்ருர்கள்.

அப்படியே வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் இங்கிலாங் தின் சமயத்துறை ஆட்சி நடந்தது மாறி, இதை அடுத்த இடங்களில் பல நிறுவனங்கள் எழுந்தன; ‘சர்ச் இல்லம்' முதலியவை பெருகின. - - -

இங்கே சமயத் தலைவராகிய ஆபட்டும் வேறு குருமார் களும் வசித்து வந்தார்கள். பிற்காலத்தில் அந்த இடங்களே அழித்துப் புதிய பெரிய கட்டடங்களைக் கட்டினர். சமயத் தொண்டர்கள் பலர் இங்கே வாழ்ந்து வந்தனர். முதலாம் எலிஸபெத் அரசியார் காலத்தில் ஒரு குழுவினர் ஒரு சமயத் தலைவருடைய ஆட்சியின்கீழ் இருந்து தொண்டாற்றும் முறை ஏற்பட்டது. 1560ஆம் ஆண்டு முதல் இந்த முறை.