பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கண்டறியாதன கண்டேன்

வழக்குக்கு வந்தது. ஒரு தலைவரும், பன்னிரண்டு சமய வாணர்களும் அடங்கிய குழு அது. அரசியார் அவர்களுக்கு வேண்டிய சொத்தை வழங்கினர்.

ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு உண்டு; மனைவி உண்டு. இந்த இடத்தில் இன்னரைப் புதைக்கலாம் என்று கூறும் உரிமை இந்த மடாலயத் தலைவருக்கு இருந்தது. முன் பெல்லாம் இங்கே அதிக மக்கள் வருவதில்லை. 1816 முதல் 1842 வரை இங்கே தலைமை தாங்கிய அயர்லந்த் என்ற சமயத் தலைவர் பொதுமக்கள் இங்கே வந்து பார்க்கலாம் என்று அநுமதித்தார். அதுமுதல் மக்கள் மிகுதியாக வரத் தலைப்பட்டார்கள். இப்போது கூட்டம் கூட்டமாக வரு கிருர்கள். லண்டனுக்கு வரும் அயல் நாட்டினர் இந்தப் பெரிய ஆலயத்தைப் பார்க்காமல் போவதில்லை.

எலிஸபெத் அரசியின் காலத்துக்கு முன் இங்கே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் சமயத்துறையில் பெரிய வர்களாக இருக்தவர்களையுமே சமாதி செய்தார்கள். அந்த அரசியின் காலத்துக்குப் பின் செல்வர்களுக்கும் பெருமக்கள் பலருக்கும் இடம் பெற்றுச் சமாதி செய்து நினைவுச் சின்னங்களை எழுப்பினர்கள். அந்த நினைவுச் சின்னங்கள் பல, அழகிய அருமையான சிற்ப வேலைப் பாடுகளே உடையவை.

முதலாம் எலிஸபெத் அரசியின் சமாதியின்மேல் முதலாம் ஜேம்ஸ் அரசர் ஒர் அழகான கினேவு மண்டபத் தைக் கட்டியிருக்கிருர். இழைத்துக் கருகருவென்று ஒளி விடும் தூண்களும் பல்வேறு வண்ணச் சித்திரங்களும் இந்த மண்டபத்தை அழகு செய்கின்றன. இந்தச் சமாதி மண்டபத்துக்கு எதிரே அந்த அரசரின் இரண்டு புதல்விய கருடைய சமாதிகளும் அவற்றின்மேல் அவர்க்ளுண்டய வடிவ்ச் சிலைகளும் இருக்கின்றன. ஸோபியா என்ற பெண் குழந்தை பிறந்த மறுகாளே (1606) இறந்துவிட்டது. மேரி என்ற பெண்குழந்தை இரண்டு ஆண்டு வளர்ந்து (1601) இறந்து போயிற்று. அந்த இருவருக்கும் இங்கே சிலைகள் அமைத்