பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசி வாழும் அரண்மனை 259

பசுவெளியை, ஓடையைக் கண்குளிரக் கண்டேன். ஒடை களில் வாத்துக்கள் ந்ேதிக்கொண்டிருக்கின்றன. மக்கள் குழந்தை குட்டிகளுடன் வந்து குஷியாகப் பொழுது போக்குகிரு.ர்கள். கையில் சிற்றுண்டிகளையும் தானியத் தையும் கொண்டு வந்து பறவைகளுக்குப் போடுகிருர்கள். குருவிகளும் புருக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அவற்றை உண்ணுகின்றன. புருக்கள் தத்தித் தத்தி கடந்து தானியத்தைக் கொத்திக் கொத்தி உண்ணும் போது சிறு குழந்தைகளுக்கு ஒரே கொம்மாளம். அவர்களும் தத்தித் தத்தி கடக்கிருர்கள். புருக்களின் கடையையும் குழந்தைகளின் துள்ளலேயும் ஆரவாரத்தையும் கண்டு ஆண்களும் பெண்களும் சிரித்துக் களித்து இன்புறு கிரு.ர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு கவலை இருக்குமோ, தெரியாது. ஆனல் அந்த நேரத்தில் எல்லா வற்றையும் மறந்துவிட்டு ஒரே களிக்கடலில் ஆழ்கிருர்கள். அவர்கள் வீசும் உணவுக்காகக் குருவிகளும் புருக்களும் பறந்து வருகின்றன. அவற்றிற்கு அப்படி வருவது வழிக்க மாகிவிட்டது. மனிதனுடைய மனம் பறவையைப் போல உல்லாசமாகப் பறக்கும் நிலையைப் பயில்கிற இடமாக அந்தப் பூங்கா இருக்கிறது.

அங்கிருந்து "ரீஜண்ட் பார்க்' என்ற பூங்காவுக்குப் போைேம். "இங்கே திறந்த வெளி அரங்கு இருக்கிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களே நடிக்கிருர்கள்" என்று அன்ர். காகசுப்பிரமணியன் சொன்னர். அது மிகவும் விசாலமான பூங்கா. ஒரிடத்தில் திறந்த வெளி அரங்கு இருந்த து. அங்கே போய் நாடகம் பார்க்கலாம் என்று ஆசையோடு போைேம். இடம் கிடைக்கவில்லை. வெளியிலிருந்து

அரங்கைப் பார்த்துவிட்டுத் திரும்பினேம்.

"நாளேக்கு எங்கே போகலாம்' என்று அன்பரைக் கேட்டேன். -

'பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் போகலாம். அங்கே சரியாகப் பகல் 11-30 மணிக்குக் காவல் மாற்றக் காட்சி