பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கண்டறியாதன கண்டேன்

நடைபெறும். அதைப் பார்க்க மக்கள் திரளாகக் கூடுவார்கள்." .

அப்போது அன்பர் கணேசன் தாம் மறுநாள் ஷேக்ஸ்பியர் அவதாரத் தலமாகிய ஸ்டிராட்போர்டு போக ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னர். எனக்கு வேறு வேலை இருந்தமையால் போக முடியவில்லை. ஆகவே பகலில் பக்கிங்ஹாம் அர ண் மனே க் கு ப் போகலாம் என்று திர்மானித்தேன்.

அன்பர் சிவசுப்பிரமணியன் மறுநாள் காலையில் தம் காருடன் வந்தார். என்னேயும் வேறு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அரசி வாழும் அரண்மனைக்குக் சென்ருர். .

நாற்பது எகராவுக்கு மேல் விரிந்து பரந்த கிலப்பரப்பில் பிரிட்டிஷ் மன்னர்கள் வாழும் அரண்மனை அழகுக் கொலு இருக்கிறது. அதன் வாசலுக்கு முன்னுள்ள கினேவு. மேடையில் விக்டோரியா அரசியின் திருவுருவம் கம்பீரமாக விற்றிருக்கிறது, அதன் உச்சியில் சிறகை விரித்து கிற்கும் தேவதூதனுடைய வடிவம் தங்கத்தால் அமைந்து பளபளக் கிறது. எங்கும் பசுமையும் இடையிடையே மலரின் வண்ணமும் கலந்து மிளிரும் வெளியில் மக்கள் காவல் மாற்றச் சடங்கைக் காணக் கூடியிருந்தார்கள்.

இப்போது பக்கிங்ஹாம் அரண்மனை என்ற பெயரோடு அழகிய கலை மாளிகையாகத் திகழும் இந்தப் பேரமைப்பு, ஆதியில் பக்கிங்ஹாம் இல்லமாக இருந்ததாம். முந்நூறு ஆண்டுகளுக்கு முன் 1762இல் முன்ரும் ஜார்ஜ் அரசர் அந்த மாளிகையைத் தம்முடைய தேவிக்கு உறைவிடமாக வழங்கினர். அந்த அரசருடைய ஓவியமும் அவருடைய, தேவியாகிய அரசியின் ஓவியமும் இந்த அரண்மனையில், இப் போதும் இருக்கின்றன. அப்படி இருந்த மாளிகை. நாளடைவில் விரிந்து பல மன்னர்களின் விருப்பப்படி கைதேர்ந்த சிற்பிகளின் கைத்திறத்தால்