பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசி வாழும் அரண்மனை 263

இங்குள்ள அறைகளில் புகுந்தால் தந்தமும் தங்கமும் கண்ணேப் பறிக்கும். பட்டும் வெல்வெட்டும் கையை இழுக்கும். கண்ணுடி அறைகளும் கண்ணுடிக் கூரையும் அரசபோகம் இன்னதென்பதைக் காட்டும். அணிகலக் கூடம், ஆடை புனேயும் அரங்கு, அத்தாணி, ஆலோசனை. யரங்கு, விருந்துக்கூடம், பள்ளியறை, திருமஞ்சன சாலே என்று பல பல பகுதிகள் இந்த அழகிய அரண்மனையில் இருக்கின்றன.

அரண்மனைக்கு வெளியே புல்வெளிகளும், பூஞ்செடி

களும், ஓடைகளும் உள்ளன. ஒரிடத்தில் ஒரு குளம் இருக்கிறது. வந்தவர்களில் சிலர் அதில் காசை வீசி எறிவதை நான் பார்த்தேன். 'ஏன் இப்படி நாணயங்களே எறிகிருர்கள்?' என்று கேட்டேன். 'இந்தக் குளத்துக்கு 'அதிர்ஷ்டக் குட்டை (Fortune pond) என்று பெயர். இதில் காசைப் போட்டால் தங்கள் விருப்பம் நிறைவேறு மாம்' என்று அன்பர் சொன்னர். அதைக் கேட்டபோது எனக்கு வேடிக்கையாக இருந்தது. கம்முடைய ஊர்களில் காவிரியிலும் கங்கையிலும் ரோடும்போது பக்தர்கள் தலையிலே காசை வைத்துக்கொண்டு மூழ்குகிருர்கள். அப்படிச் செய்தால் புண்ணியம் உண்டு என்று நம்பு கிருர்கள். 'இதெல்லாம் குருட்டு கம்பிக்கை' என்று குருடு இல்லாமல் கண்ணேத் திறந்து பார்க்கிறவர்கள் சொல்லு கிருர்கள். ஆனால், என்ன ஆச்சரியம் லண்டனிலும் அல்லவா இந்தக் குருட்டு கம்பிக்கை இருக்கிறது! அரண் மனேக்கு அருகில் அதுவும் கொலு விருக்கிறதே!

என்னுடைய ஆச்சரியத்தைக் கண்ட அன்பர் காக சுப்பிரமணியன் சொன்னர்: "இங்கே இப்படியுள்ள நம்பிக்கை பல உண்டு. ஜோசியம், கைரேகை பார்க்கிறவர் களுக்கு இங்கே கிராக்கி அதிகம். ஒரு போர்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டால் மாசம் 200 பவுன் சம்பா திக்கலாம்' அதைக் கேட்டபோது எனக்கும் ஒரு கைப் பாசை தட்டியது. ஆனல் அது கிறைவேறக்கூடிய ஆசை