பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர்வ நகரம் so

சென்னையில் பெரும்பாலோர் உறங்கிக்கொண்டிருப்பார்கள்: நான் விமான நிலையத்தில் நடந்துகொண்டிருந்தேன்.

அப்போது அங்கே உள்ள கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை 6-15 மணி. ஆனல் வெயில் நன்ருக அடித்துக் கொண்டிருந்தது. நம் ஊரில் சூரியன் மலைவாயில் விழுகிற நேரம் அது. அங்கோ இன்னும் அவன் வானில் ஊர்ந்து கொண்டிருந்தான். 9 மணி வரையிலும் அவனுடைய பயணம் இருக்கும் என்பதைப் பிறகு தெரிந்து கொண்டோம்.

பிரயாணிகள் விமான நிலையத்தில் இறங்கியவுடன் அங்குள்ள தளம் தானகவே நகரும். இயங்கும் பட்டை (Conveyer belt) அமைந்தது அது. அது நம்மை விமானக் காரியாலயம் வரையில் கொண்டு சேர்த்துவிடும். அன்று அது வேலை செய்யவில்லை. ஆகவே, ஒரு பர்லாங்குக்கு மேல் கடந்து போக வேண்டியிருந்தது. -

எங்களை வரவேற்க ஏர் இந்தியாவைச் சார்ந்த பெண் மணி ஒருவரும் பாரிஸில் உள்ள இந்தியத் தூதுவரகத்தைச் சார்ந்த திரு ஐயர் என்பவரும் வந்திருந்தார்கள்.

கடக்கும்போதே சுற்றிலும் பார்த்துக்கொண்டே போனேன். பலர் பயமுறுத்தியபடி அங்கே குளிர் ஒன்றும் அதிகமாக இல்லை. நம் ஊரில் மார்கழி மாத ஆரம்பத்தில் இருக்கிற மாதிரி இருந்தது. அங்கே அப்போது கோடைக் காலம். "தட்ப வெப்ப நிலை எப்படி இருக்குமோ? நாம் கம்பளிச் சட்டை கொண்டு வரவில்லையே! என்று கடுங்கியிருந்த எனக்குக் குளிர் விட்டுப்போயிற்று.

பாரிஸில் இரண்டு விமான கிலேயங்கள் உண்டாம். நாங்கள் வந்து இறங்கியது பெரியது. அதில் ஒரு நாளேக்கு 800 விமானங்கள் புறப்படுமாம். எங்கே பார்த்தாலும் தட்டாரப் பூச்சிகளைப் போல விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. மற்ருெரு விமான கிலேயத்தில் ஒரு நாளேக்கு 400 விமானங்கள் புறப்படுமாம். --