பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வானும் கடலும்

கான் பர்மாவுக்குப் போயிருந்தேன். அங்கே போய் இறங்கியவுடன் என் கடிகாரத்தைப் பார்த்தேன்; அங்குள்ள கடிகாரத்தைப் பார்த்தேன். இரண்டுக்கும் ஒரு மணி வேறு பாடு இருந்தது. என் கடிகார மணியைப் பர்மா மணியாக மாற்றிக் கொண்டேன். ஒவ்வொரு நாட்டிலும் இந்தக் கால வேறுபாடு, மணியில் வித்தியாசம் இருக்கிறது. அமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது பத்திரிகையில் வரும்போது அந்த நேரத்தைக் குறிப்பிட்டுப் பக்கத்தில் இந்திய நேரம் (Indian Standard Time) என்று அதே சமயத்தில் இங்குள்ள மணி யைக் குறிப்பிடுவார்கள். அமெரிக்காவில் உச்சி வேளேயாக இருக்கும்; நமக்கு நள்ளிரவாக இருக்கும்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் மணிக் கணக்கு வேறு படுகிறது. உச்சி நேரம் என்பது எல்லா இடங்களிலும் ஒன்ருக இருப்பதில்லை. எல்லா நாடுகளுக்கும் பொதுவாக ஒரு மணி இருக்க வேண்டாமா? அது கிரீன்விச் நேரம் (Greenwich Time).

பூமியில் ஒர் இடத்தைக் குறிப்பிட வேண்டுமானல் அதற்கு ஏதாவது அடையாளம் வேண்டும். அந்த அடையா ளத்தை உலக நாடுகள் எல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பூமியாகிய உருண்டையைக் கோளமாக வைத்து அதன் மேலுள்ள நாடுகளே வரைந்து காட்டும் பூகோளத்தை (Globe) நாம் பார்க்கிருேம். அதன் குறுக்கும் நெடுக்கும்