பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கண்டறியாதன கண்டேன்

கோடுகளே அமைத்திருப்பார்கள். குறுக்கே உள்ள கோடு களே அட்சரேகைகள் (Latitude) என்பார்கள். இந்தக் கோடுகளின் நடுவிலுள்ள கோட்டுக்குப் பூமத்திய ரேகை (Equator) என்று பெயர். கிலத்தின் நெடுக்கிலுள்ள கோடு

களேத் தீர்க்கரேகைகள் (Longitude) என்கிருர்கள்.

ஒருரையோ ஒரு பகுதியையோ குறிப்பிடும்போது இன்ன அட்சரேகைகளுக்கும் இன்ன கீர்க்க ரேகைகளுக்கும்

இடையில் இன்ன இடம் இருக்கிறது என்று குறிப்பிடுவது

வழக்கம். பூமத்திய ரேகையிலிருந்து அட்ச ரேகைகளைக்

கணக்கிடுவார்கள். பூமத்திய ரேகைக்கு கிரட்சரேகை

என்றும் பெயர் உண்டு. நெடுக்காக வரையும் தீர்க்க ரேகை

களைக் கணக்கிடுவதற்கு நடு ரேகை ஒன்று வேண்டும்.

கிரட்ச ரேகை இயற்கையாகவே அமைந்திருக்கிறது. தீர்க்க: ரேகை எல்லாம் ஒரே நீளமுடையவை; தென்வடலாக

உள்ளவை. எந்த இடத்தில் கோட்டை இழுத்தாலும் அதைத் தொடங்கும் ரேகையாக வைத்துக் கணக்கிடலாம்.

அப்படி ஒவ்வோர் ஊர்க்காரரும் தங்கள் ஊரில் ஒடும்

ரேகைதான் நடுவானது என்ருல் எல்லாமே பூஜ்யமாக

இருக்கும். எல்லாரும் சேர்ந்து ஏதாவது ஒரிடத்தில்

உள்ளதையே பூஜ்ய ரேகையாக ஒப்புக்கொண்டால்

அதிலிருந்து மற்ற ரேகைகளைக் கணக்கிடலாம்.

வாஷிங்டனில் 1880ஆம் ஆண்டில் அகில உலக மாநாடு ஒன்று கூடியது. அங்கே கிரீன்விச்சிலுள்ளதையே பூஜ்ய ரேகையாக ஒப்புக்கொண்டார்கள், அதுமுதல் கிரீன்விச் நேரம் உலகப் பொது நேரமாயிற்று. உலகமெல்லாம் சேர்ந்து ஒன்றை ஒப்புக்கொள்வதானல் அது ஆச்சரியத் திலும் ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தில்ை கிரீன்விச்சுக்கு மதிப்புப் பெருகியது. - -

அந்தக் கிரீன்விச்சுக்குப் போயிருந்தேன். லண்டன் மாநகரத்தைச் சேர்ந்த புறநகராக இருக்கிறது அது. 26-1-70 அன்று அன்பர் சிவசுப்பிரமணியன் என்னைத் தம் காரில் அங்கே அழைத்துச் சென்ருர். அங்கே பார்ப்பதற்கு