பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானும் கடலும் ፴67 ́

எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. வானேயும் கடற். பயணத்தையும் ஆராயும் ஆராய்ச்சி கிலேயங்களே அங்கே காணலாம். எல்லா இடங்களேயும் பார்த்துத் தெரிந்து கொள்ள ஒரு மாதமாவது ஆகும். சில இடங்களைப் பார்த் தேன். -

முதலில் அங்குள்ள வானிலை ஆராய்ச்சிக் கூடத்துக்குச் சென்றேன். பழைய ஆராய்ச்சிக் கூடம் அது (The Old. Royal Observatory). @LGurg, GLIT. Funšasir ær Grib காட்சிச் சாலையாக வைத்திருக்கிருர்கள். முன்பு இருந்த பல கருவிகளே இங்கே வைத்திருக்கிருர்கள். இப்போது ஆராய்ச்சிக் கூடத்தை ஸஸ்ஸெக்ஸிலுள்ள ஓரிடத்துக்கு மாற்றியிருக்கிருர்கள்.

இந்தப் பழைய வானிலை ஆராய்ச்சிக்கூடம் சிறியதாக இருந்தாலும் வானிலை ஆராய்ச்சி வளர்ந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது சார்லஸ் அரசன் காலத்தில் 1675ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சிச்சாலை கிறுவப்பெற்றது. ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளாக இங்கேயே பல ஆராய்ச்சி வல்லுநர்கள் இருந்து உலகுக்குப் பயன் தரக்கூடிய பல சோதனைகளைச் செய்து பல அரிய உண்மைகளேக் கண்டுபிடித்தார்கள். சந்திரனுடைய இயக் கத்தையும் விண்மீன்களின் நிலையையும் தெரிந்து கொண் டார்கள். கடலிலே செல்லும் கப்பல்கள் இன்ன இடத்திலே இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளத் தீர்க்க ரேகைகள் அவசியம். அவற்றை அமைப்பதற்காகவே முதல் முதலாக இந்த ஆராய்ச்சிக்கூடம் எழுந்தது. -

அக்காலத்தில் சமயப் பாதிரியாக இருந்த ஜான் *ủarrừsive @ (John Flamsteed, 1646–1719) grgörLair வானியலறிவும் கணித அறிவும் மிக்கவராக விளங்கினர். அவரையே இந்தக் கூடத்தில் முதல் வானிலை ஆய்வாளராக அரசர் நியமித்தார். அப்போது பூங்காவாக இருந்த இந்த இடத்திலே மேடாக உள்ள பகுதியில் இந்தக் கூடத்தைக் கட்டும்படி அரசர் ஆணை பிறப்பித்தார். தேம்ஸ் நதிக்