பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானும் கடலும் 26.9%

களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல் ஒன்றை வெளி யிட்டார். வானிலை ஆராய்ச்சி வித்தகர்கள் அதைப் பெரிதும், போற்றிப் பயன் அடைந்தார்கள்.

1946ஆம் ஆண்டில் இங்கிருந்த ஆராய்ச்சிக் கூடத்தை ஸஸ்ஸெக்ஸில் உள்ள ஹர்ஸ்ட்மான்க்யூ கோட்டை (Herst. mancewх Castle) srair др gu-šiše; upir i njegoiresair. இப்போது அங்கே ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக். கிறது. -

கிரீன்விச்சில் அவசியம் பார்க்க வேண்டிய இடம் தேசியக் கப்பல் துறைக் காட்சிச்சாலை (The National Mari-- time Museum) இந்த மியூஸியம் 1937ஆம் ஆண்டில் கிறுவப் பெற்றது. இந்தக் காட்சிச் சாலையை அமைப்பதற்கு, ஆன செலவையெல்லாம் ஸர் ஜேம்ஸ் கேர்டு (Sir James Caird) என்பவரே ஏற்றுக் கொண்டாராம். பன்னிரண்டரை லட்சம் பவுன் வரையில் அவர் வழங்கினர்;

1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஆரும் ஜார்ஜ் மன்னர் இதைத் திறந்து வைத்தார். கடல் பயணம், கப்பல் கட்டும் கலே, கப்பல்களுக்குப் பயன் படும் வானிலை ஆராய்ச்சி ஆகியவற்றை வளர்ப்பதற்காகவே இந்த மியூவி யம்உருவாகியது. கப்பல்கட்டும் கலே எப்படிப் படிப்படியாக வளர்ந்து வந்தது என்பதை இங்குள்ள காட்சிப் பொருள் களைக் கொண்டு தெள்ளத் தெளிய அறியலாம். கண்ணும் அறிவும் உடையவர்கள் இங்குள்ள பொருள்களைக் கண்டும் விளக்கங்களைப் படித்தறிந்தும் கப்பல் கலே நிபுணரேயாகி விடலாம். அவ்வளவு ஒழுங்காகவும் தெளிவாக விளங்கும் வகையிலும் இங்குள்ள வரிசை வரிசையான காட்சிப் பொருள்களும் விளக்கங்களும் இருக்கின்றன. பிரிட்டனில் உள்ளவர்கள் திரைகடலோடித் திரவியம் தேடினவர்கள். கடலில் பயணம் செய்வது அவர்கள் வாழ்க்கையின் ஒரு. பகுதி. கப்பற் படையும் கடற் போரும் கடலில் வெற்றி பெற்ற வீரர்களின் மிடுக்குச் செயல்களும் அவர்களுடைய வரலாற்றில் மிகுதியாகக் காணப்படுவன. ஆகவே இத்