பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கண்டறியாதன கண்டேன்

தகைய காட்சிச் சாலையை நிறுவிக் கண்ணே போல் போற் றிப் பாதுகாத்து வருவது அவர்களுடைய இயல்புக்குப் பொருத்தமான செயலே.

உலகத்திலுள்ள கப்பற் கலைக் காட்சிச் சாலைகளில் இதுவே தலையானது என்று யாரும் வியப்படைகிருர்கள். கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் நடந்தால் இந்த மியூஸி யத்தின் பகுதிகளைக் காண முடியும். பயணக் கப்பல்கள், போர்க் கப்பல்கள்,பாய் மரக் கப்பல்கன், நீராவிக்கப்பல்கள். வேட்டைக் கப்பல்கள் என்று எத்தனையோ வகைக் கலங்கள் இங்கே உள்ளன.

இங்கே உள்ள காட்சிப்பொருள்கள் எத்தனைதெரியுமா? அதைக் கேட்டாலே பிரமிப்பாக இருக்கும்

வண்ண ஓவியங்கள்-3500; அச்சிட்ட படங்கள்; வரை படங்கள்-2800 கப்பலின் மாதிரிகள் 900; கப்பல் கருவிகள் 1700; வாள்-350; மெடல்கள்-3500. அச்சிட்ட புத்தகங்களே ஐம்பதியிைரம் இருக்கும். கையெழுத்துப் பிரதிகள் முக்கால் மைல் தாரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக் கின்றன. இரண்டு லட்சம் போட்டோக்களேச் சேகரித்து வைத்திருக்கிருர்கள். இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றது. இங்கே நாளைக்கு 2400 பேருக்குக் குறையாமல் வந்து பார்த்துச் செல்கிருர்கள். நூற்றுக் கணக்கான ஆராய்ச்சி மாணவர்கள் இங்கே வந்து கடலையும் கப்பலேயும் பற்றி ஆராய்ச்சி நடத்துகிருர்கள், இதைப் பாதுகாப்பதற்காக ஆண்டுக்கு 380.00 பவுன் செல வாகிறது.

இங்குள்ள பொருள்களின் குத்து மதிப்பு இரண்டு கோடிப் பவுனுக்குக் கிட்டத்தட்ட இருக்கும் என்று சொல் கிருர்கள். ஆனல் இரண்டு கோடிப் பவுனச் சம்பாதித்து விடலாம். இங்குள்ள பொருள்கள் போய்விட்டால் அமற்றை மறுபடியும் காண முடியுமா, என்ன?