பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. லண்டன் வாழ்க!

அன்டர் நாகநாதனும் நாகசுப்பிரமணியனும் லண்ட னில் உள்ள முக்கியமான இடங்களுக்கெல்லாம் போய்ப் பார்த்தவர்கள். அவர்கள் எந்த இடத்துக்கு வேண்டு மானலும் என்னைக் கூட்டிச் செல்லத் தயாராக இருந்தார் கள். லண்டனில் உள்ள மூலை முடுக்குகளையெல்லாம் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனல் அது முடிகிற காரியமா? பார்த்தவரையில் போதும் என்ற திருப்தி இல்லாவிட்டால், பார்த்ததைவிடப் பார்க் காதது அதிகமாக இருப்பதால் மனத்தில் குறையே கிலவும். எது சாத்தியமோ, அதை என்ருகப் பார்ப்பது என்பது என் இயல்பு: ஆகவே எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம் என்று போலித் திருப்தியை அடைவதைவிடப் பார்த்ததை கன்ருகப் பார்த்தோம் என்று மனநிறைவு பெறுவதே மேல் என்று கினைத்தேன். - . .

'ஹரே கிருஷ்ணு பஜனைக்காரர்களே நீங்கள் பார்க்க வேண்டாமா?' என்று கேட்டார் நாகசுப்பிரமணியம்; அவரை டாக்டர் மணி என்று சுருக்கமாக அழைப்போம்.

"அவர்களைப் பற்றிப்பத்திரிகையில் படித்திருக்கிறேன். இந்தியாவுக்கும் வந்திருக்கிருர்களாம்; பார்க்க முடிந்தால் பார்க்கலாம்' என்றேன்.

'நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆக்ஸ் போர்டு தெருவில் நண்பகல் 12 மணிக்கு அவர்கள் பஜனை செய்துகொண்டு வருவார்கள். எல்லாம் கிருஷ்ண பஜனே: கிருஷ்ண காமாவளி. கிருஷ்ணன் தான் அவர்கள் தெய்வம்.

கண்டறி-18