பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? கண்டறியாதன கண்டேன்

விமான கிலேயத்தில் பாஸ்போர்ட்டையும் உடல்நலச் சான்றிதழையும் காட்டினுேம். எங்கள் சாமான்கள் ஓரிடத்தில் இயங்கு பட்டையில் வந்திருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு திரு ஐயர் கொணர்ந்திருந்த காரில் ஏறினேம். திரு கருத்திருமன், திரு சா. கணேசன், திரு கா. அப்பாத்துரை, நான் ஆகிய நால்வரும் விமான கிலேயத்திலிருந்து பாரிஸ் மாநகரை அடைந்தோம். அங்கே ஒரு ஹோட்டலில் காங்கள் தங்க ஏற்பாடு செய் திருந்தார்கள். நல்ல வசதியான விடுதி. அங்கே சென்ருேம். ஒவ்வொருவருக்கும் ஓர் அறை. டாக்மார் (Dagma) ஹோட்டல் என்பது அதன் பெயர். தமிழ் மாநாடு கடக்கும் இடத்துக்கு அருகில் இருப்பதனால் அங்கே தங்கில்ை போகவர வசதியாக இருக்கும் என்று ஏற்பாடு செய்ததாகத் திரு ஐயர் சொன்னர்; அவர் முழுப் பெயர் ஹரிஹர சுப்பிரமணிய ஐயர்.

அறையில் நல்ல படுக்கை அலமாரி, மேஜை, நாற்காலிகள், டெலிபோன் இருந்தன. அதற்குள் குளியலறை அதில் தண்ணிரும் வெந்நீரும் வந்தன; அமிழ்ந்து நீராடுவதற்குத் தொட்டி இருந்தது. மற்றச் செளகரியங்களும் இருந்தன.

அறையில் சாமான்களே வைத்தோம். திரு ஐயர் விடை பெற்றுக்கொண்டார். அப்போது மணி எட்டை எட்டிக்கொண்டிருந்தது. ஆலுைம் சூரிய வெளிச்சம் இருந்தது. அறைகள் யாவும் மேலே வெவ்வேறு மாடியில் இருந்தன. திரு அப்பாத்துரையார் வந்த அலுப்பில் படுத்துக்கொண்டார். நானும் மற்ற அன்பர்கள் இருவரும் வெளியே சென்று பார்த்து வருவோம் என்று: புறப்பட்டோம். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலின் கடை களெல்லாம் பூட்டியிருந்தன. ஆலுைம் கண்ணுடிச் சுவர்களினூடே உள்ளே உள்ள பண்டங்கள் தெரிந்தன.