பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கண்டறியாதன கண்டேன்

பதினெட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த ஹோகார்த் என்ற ஒவியர் அந்தக் காலத்தில் பொது மக்களின் அபி மானத்தை மிகுதியாகப் பெற்றவர். அவர் மன்னர்களையும் செல்வர்களேயும் ஒவியமாக்குவதை விரும்பவில்லை. ஏழை களையும் நடுத்தர வாழ்க்கை உடையவர்களேயும் தம் சித்தி ரங்களில் தீட்டினர். தம்மிடம் வேலை பார்த்த ஆறு பேர் களின் முகங்களே ஒரு சேர வரைந்த ஒவியம் ஒன்று இங்கே இருக்கிறது.

ஸர் ஜோஷவா ரெய்னல்ட்ஸ் என்பவர் ஓர் ஓவியர். அவர் தம் உருவத்தையே தீட்டியிருக்கிருர். அவர் காது. கேளாதவர். இடச்செவிக்கருகில் கைவைத்த நிலையில் தாம் செவிடரென்பதைக் காட்டும் கோலத்தில் தம் உருவத்தை வரைந்திருக்கிருர். -

பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த டர்னர் (r. M. W. Turner) என்பவர் பெரிய ஓவியர். அவர் முந்நூறு எண்ணெய் வண்ண ஒவியங்களும், 19,000 பிற வகை வண்ணச் சித்திரங்களும் படைத்தார். அவற்றில் பல இந்த ஒவியக் கலேயரங்கில் இருக்கின்றன. தம் காலத்தில் அவர் தம்முடைய ஓவியங்களே அவ்வப்போது கடைபெறும் காட்சியரங்குகளில் வைத்துப் பலரும் பார்த்து மகிழச் செய்தார். வெளியிலே காட்டாமல் சில ஒவியங்கஆள வைத்திருந்தார். அவற்றையும் இங்கே யாவரும் காணும் படி வைத்திருக்கிருர்கள். காலை நேரத்தின் பொன் வெயிலயும், மாலே நேரத்தின் செக்கரையும் காட்டும் இரண்டு ஒவியங்கள் வண்ண ஜாலத்தின் அருமையைக் காட்டிக்கொண்டு விளங்குகின்றன.

வில்லியம் பிளேக் என்பவர் பதினெட்டாவது நூற். ருண்டில் வாழ்ந்த கவிஞர். அவர் ஒவியத்திலும் வல்லவர். அவருடைய ஓவியங்கள் பல இங்கே உள்ளன. கற்பனை யினல் உட்கருத்தையுடையவையாக அமைத்த உருவக ஒவியங்களே அவர் படைத்திருக்கிருர் அவற்றைப் பார்த்த,