பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன் வாழ்க . 277

போது நம் காட்டில் மாபெரும் கவிஞராகத் திகழ்ந்த ரவீந்திரர் வரைந்த ஒவியங்கள் என் கினேவுக்கு வந்தன.

நவீன ஓவியம் என்னும் பிரிவில் இந்த நூற்ருண்டிலும் இதற்கு முன் நூற்ருண்டிலும் தோன்றிய பல புரட்சிச் சித்திரங்களேப் பார்க்கலாம். மற்ற ஓவியங்களேப் பார்த்து மகிழ்வதுபோல அவற்றைப் பார்த்து இன்புற முடியாது. "ஓவியர் என்ன கருத்துடன் இதை எழுதியிருக்கிருர்?" என்று யோசிக்கவேண்டும். அப்படி யோசித்தாலும் நமக்கு எளிதில் புரியாது. அதுதான் "மாடர்ன் ஆர்ட்'.

அந்தத் துறையில்தான் எத்தனை வகை அவற்றைக் குறிப்பிடும் பெயர்களுக்குத் தமிழ்ப் பெயர்களைக் கண்டு பிடிக்க முடியாது. ஆங்கிலத்திலுள்ளதே விளங்காத போது, தமிழிலே எங்கே விளங்கப் போகிறது? வண்ண வேறுபாடுகளாலும், அவற்றின்மேல் படும் ஒளிவீச்சிலுைம் சிலவகை உணர்ச்சிகள் உண்டாகின்றனவாம். அந்த நுட்ப மான உணர்ச்சியை விளக்கும் முறைதான் இந்த ஓவியங் களில் உள்ள புதுமையாம். இம்ப்ரஷ்ஷனிஸ்ம் (Impressionism) என்பது ஒரு தனிப் பாணி. க்யூபிஸ்ம், (Cubism), ¿Ligoffigiwib (Futurism), Gaumirlll!! @civib (Vorticism). Grua flavih (Rayonism), svirfu je svih (Surrealism) – இப்படிப் பல பல இஸ்ம்கள் ஒவியப் பாணிகளாக இருக் கின்றன. அந்த அந்தப் பாணியில் உள்ள ஒவியங்களை வகைப்படுத்தி வைத்திருக்கிருர்கள். வட்டமும் முக்கோண மும் நீள வட்டமுமாகவே அமைந்தது ஒரு சித்திரம். அதற்கு என்ன என்னவோ உள்ளுறை உண்டாம். கிராப் (Gript) மாதிரி சின்னச் சின்னச்சட்டங்களுள்ள பரப்பில் ' கடுநடுவே கறுப்புப் புள்ளி. வெள்ளைப் புள்ளி, இருட்டின பகுதி, வெளிச்சப்பகுதி - இப்படி அமைந்த படம் ஒன்று. மந்திரங்களும் சூத்திரங்களும் இருக்கின்றன; அவற்றிற்கு எளிதில் அர்த்தம் புரிகிறதா? சித்தர்கள் பாடிய பாடல்கள் இருக்கின்றன. அவற்றைப் பாடுகிருேம். ஆனல் தெளிவாக அர்த்தம் புரிகிறதோ அர்த்தம் இல்லாத பாடல்கள் அல்ல.