பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 கண்டறியாத்ன கண்டேன்

முடைய பன்னிரு மாளுக்கர்களுடன் தமிழ்த் தெய்வமாகிய உங்களிடம் வந்து தமிழ்த்தொண்டு புரிய வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு இருக்கிறது என்று ஒருமுறை சொன்னர்' என்று சொன்னர்கள். அவர் நாடகம், காவல், கட்டுரை, கவிதை எல்லாம் எழுதியிருக்கிருர் நாடக இயல் என்ற நாடக இலக்கணத்தையும், சித்திரகவியின் இலக்கணத் தையும் எழுதியுள்ளார். புதிய கவிதையையும் இயற்றி யுள்ளார். அந்தக் காலத் திலேயே தமிழின் பழமையைச் சொன்னதோடு புதுவகைப் படைப்பையும் தந்தவர் அப் பெரியவர். இவ்வாறு பரிதிமாற் கலைஞர் பெருமையை நான் சொன்னேன். வேறு சிலரும் சுருக்கமாகப் பேசினர்கள்.

மறுநாள் லண்டனை விட்டுப் புறப்பட வேண்டும். ஒரு வாரம் லண்டனில் இருந்தாலும் எத்தனையோ இடங்க ளப் பார்த்தேன்; எத்தனையோ செய்திகளைத் தெரிந்து கொண்டேன். புறப்படுவதற்கு முன்பு தமிழ் மொழிக்கு வளமூட்டிய ஒருவரைப்பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்த தைப் பெரிய பேருக எண்ணினேன். தமிழ் நாட்டில் பெரிய கூட்டத்தில் பேசியிருக்கலாம். அது நாள்தோறும் கடக்கிற காரியம். ஆனல் தமிழ் நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல் களுக்கு அப்பால் உலகத்திலே சிறந்த நகரங்களில் ஒன்ருகிய லண்டனில், இதயத்தைப்போல அளவால் சுருங்கியும் மதிப்பால் விரிந்தும் உள்ள சிறிய இடத்தில் அங்கப் பெரு மகளுரைப்பற்றிப் பேசியது பெருமித உணர்ச்சியைத் தந்தது.

27.7.1970 திங்கட்கிழமை பிறந்தது. விடியற்காலையில் எழுந்து நீராடினேன். நாகநாதன் பால் கொண்டுவந்து தந்தார்; லண்டன் மாாகர்ப் பால்; அன்பால் கொடுத்த பால். அதை உண்டேன், லண்டனை விட்டுப் புறப்படுகிருேம் என்ற எண்ணத்தில் சிறிது பிரிவுத் துன்பமும், வேறு புதிய இடங்களைப் பார்க்கப் போகிருேம் என்ற எண்ணத்தில் புதுமை உணர்ச்சியும் ஒன்ருேடொன்று மாருடின. லண்டன் தமிழ்ச் சங்கத்