பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர்வ நகரம் 23

மெல்ல மெல்ல எங்கள் ஹோட்டல் இருந்த தெரு வழியே நடந்தோம். அங்கங்கே உள்ள கடைகளைப் பார்த்தோம். மாளிகைகளைப் பார்த்தோம். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த மாளிகைகள் அவை,

ஒரு கடையின்முன் கின்று கண்ணுடிச் சுவர் வழியே உள்ளே இருந்த பண்டங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தோம். அப்போது ஒரு கிழவி-அறுபது வயதுக்கு மேல் இருக்கும்-கையில் ஒரு பையுடன் நடைமேடையில் வந்தாள். கிழவியானலும் அலங்காரத்தில் ஒன்றும் குறைவில்லை. எங்களுக்கு அருகில் வந்து கின்ருள். ஏற இறங்கப் பார்த்தாள். நீங்கள் எந்த நாடு?’ என்று. கேட்டாள், பிரெஞ்சில். அவள் கேட்ட கேள்வி அதுவாக இருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டோம். 'இந்தியா!' என்ருேம். - .

'இந்தியர்கள்!' என்று வியப்புடன் கூறிக் கண்ணே மலர்த்தினள். பிறகு குரலைத் தாழ்த்தித் தனி வார்த்தை களாகப் பேசிள்ை: ஆங்கில வார்த்தைகள். வாக்கியமாக அந்த மொழியில் அவளுக்குப் பேச வராது போலிருக்கிறது. 'அழகிய பெண்கள்! இரவுக் கேளிக்கை அரங்கு! augstfðiræart?” (Beautiful girls! Night Club! Come?) என்று கேட்டாள்.

எங்களுக்கு ஒரே வியப்பு பாரிஸில் முதல் அநுபவம்! 'இது கந்தர்வ நகரம் அல்லவா? இங்கே மதுவும் மங்கையும் காதலும் மிகுதி என்று சொல்லிக் கேட்டிருக்கிருேமே!’ என்ற எண்ணம் என் சிந்தனையில் ஓடியது. - -