பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 கண்டறியாதன கண்டேன்

விசாரிப்போம் என்ருல் ஒருவராவது நமக்குத் தெரிந்த மொழியில் பேசுவார் இல்லை. எல்லாம் ஜெர்மன் மொழி. இங்கிலீஷ் தெரிந்தவர் இருக்க மாட்டாரா என்று ஏங்கினேம். காங்கள் விழித்துக்கொண்டு கிற்பதைக் கண்டு யார் யாரோ வந்து என்ன என்னவோ கேட்டார்கள். அவர்கள் பேசுவது எங்களுக்கு விளங்கில்ைதானே? "ஏர் இந்தியா அலுவலகம் சென்ருல் இந்தியர்கள் இருப்பார்கள்; அவர்களிடமிருந்து நமக்கு வேண்டிய செய்திகளை அறிய லாம்; தங்குவதற்குரிய ஹோட்டலைத் தெரிந்துகொள்ளலாம்" என்ற எண்ணம் வரவே, அன்பர் கணேசன் என்னை அங்கே நிறுத்திவிட்டுப் புறப்பட்டார். ஏர் இந்தியா அலுவலகம் கான் கடை இருந்ததற்கு எதிர்ப்புறத்தில் அருகில்தான் இருந்தது. அங்கே போய் விசாரித்ததில் 'கோல்டன் ஹோட்டல்' என்ற விடுதியில் இடம் கிடைக்குமென்று தெரிந்தது. ஸ்டேஷனுக்கு அருகில் அது இருப்பதாகவும் தெரியவந்தது,

அது தங்கமயமான ஹோட்டலாக இருக்கட்டும்: அதற்கு இங்கிருந்து போக வேண்டுமே! மறுபடியும் எங்கள் சுமைகளே எடுத்துக்கொண்டோம். நாங்கள் திணறுவதை அங்கே எத்தனை கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன! அப்போது ஒர் இளைஞர் காங்கள் இந்தியர் என்பது தெரிந்து ஓடி வந்தார். அவரும் இந்தியர். "நீங்கள் எங்கே: போக வேண்டும்?' என்று இந்தியில் கேட்டார். எங்களுக்கு உயிர் வந்தது. திரு கணேசன் தமக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் ஏதோ சொன்னர். அவர் உடனே அநுமான்மாதிரி எங்கள் சாமான்களே வாங்கிக் சுமந்து கொண்டார். "கவலைப்படாதீர்கள்; நான் உங்க: ளுக்கு உதவி செய்கிறேன்' என்று சொல்லி ஹோட்டல. கோக்கிப் புறப்பட்டார். எங்களுக்கு உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயம் இருந்தது. இந்தியாவில் சில இடங்களில், வழிதெரியாமல் விழிக்கும் பிரயாணிகளுக்கு உதவி செய்வ. தாகச் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகள் உண்டு. அப்படி. இவனும் இருப்பானே? நாம் ஒருவருக்கு இருவராக இருக் கிருேம்; ஏமாற்ற முடியாது' என்று திடப்படுத்திக்