பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1292 கண்டறியாதன கண்டேன்

அன்பர் ரமணன் சாமிக்கு எங்களே அறிமுகப்படுத் தினர். அவருக்குத் தமிழர்களாகிய எங்களைக் கண்டதில் அளவற்ற ஆனந்தம். ஸ்விட்ஸர்லாந்து போவதை நிறுத்திக் கொண்டு மறுநாள் காலேயில் விமானத்தில் ரோம் போவ: தாகத் தீர்மானித்து அதற்கு ஏற்ற வகையில் எங்கள் டிக்கட்டுகளில் பதிவுசெய்து கொண்டோம்.

மாலை நேரம் வந்தது. 'இன்று நீங்கள் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வர வேண்டும்' என்று சாமி அழைத்தார். அவருடைய மனைவி அங்கே வந்திருந்தார். அவர் எங்களுக்குத் தமிழ்நாட்டுக் குழம்பு ரசம் எல்லாம் சமைத்துப் போடுவதாக அன்புடன் சொன்னர். அவர் சொன் ன இங்கிதத்தைப் பார்த்தால், சாப்பிடுகிற எங்களைக் காட்டிலும் சமைத்துப் போடுகிறவர்களுக்கு அதிக இன்பம் உண்டாகுமோ என்றே தோன்றியது. -

'ஈத்துவக்கும் இன்பம்

அறியார்கொல், தாமுடைமை வைத்திழக்கும் வண்க ணவர்'

என்று தெரியாமலா சொன்னர் வள்ளுவர்?

டிராமில் சாமி வீடு சென்று வயிருரச் சாப்பிட்டோம். ரமணனும் எங்களுடன் இருந்தார். அவர் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து விருந்துண்பவர்; பிரமசாரி.

சென்னேக்கு வந்த பிறகு ஒரு நாள் திடீரென்று. ரமணன் வந்தார். 'எனக்குக் கல்யாணம். நீங்கள் வந்து ஆசிர்வாதம் செய்ய வ்ேண்டும்” என்ருர். அப்படியே. தம்பதிகளைக் கண்டு வாழ்த்தினேன்.

சாமி வீட்டில் உண்டபிறகு யாவரும் எங்களை எங்கள் அறைக்குக் கொண்டுவந்து விட்டுச் சென்ருர்கள். காலையில் இருந்த மனநிலை என்ன? இப்போது இருந்த கிலே என்ன? எதிர்பாராத நல்ல நிகழ்ச்சியினல் விளேயும் இன்பத்தை, எடைபோட்டுச் சொல்ல முடியுமா?