பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு இது வரையில் நான்கு இடங்களில் நடந்திருக்கிறது. முதல் கருத்தரங்கு மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்றது: அதற்கு நான் போயிருந்தேன். இரண்டாவது கருத்தரங்கு சென்னையில் நடந்தது; அதிலும் கான் கலந்துகொண்டேன். மூன்ருவது கருத்தரங்கு பாரிஸ் மாநகரில் நடந்தது, அதற்கும் நான் போயிருந்தேன். நான்காவது கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது; அதற்கு நான் போகவில்லை.

பாரிஸில் கடந்த கருத்தரங்குக்குத் தமிழக அரசினர் என்னையும் ஒரு பிரதிநிதியாக அனுப்பினர். இந்த எதிர் பாராத வாய்ப்பினல் நான் பாரிஸுக்குப்போனேன்; லண்ட னுக்குப் போனேன்; ரோமாபுரிக்கும் பிற இடங்களுக்கும் போனேன். அந்த அந்த இடங்களில் உள்ள பல கிறுவனங் களைக் கண்டு களித்தேன்; கோயில்களைத் தரிசித்தேன்; காட்சிச்சாலைகளைக் கண்டு பயன் அடைந்தேன்; கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகள் ஆகியவற்றைப் பார்த் தேன்: பூஞ்சோலைகளையும் ஒவிய சாலைகளையும் கண்டு இன்புற்றேன்; பல்வேறு வகையான நாகரிகங்களைப் பார்த்தேன். --

அவ்வப்போது நான் கண்ட இடங்களைப் பற்றியும். சந்தித்த மனிதர்களைப் பற்றியும் குறிப்பெடுத்துக் கொண்டேன். காட்சிச் சாலைகள், நூலகங்கள், கோயில்கள் முதலியவற்றைப் பற்றி அழகழகாகப் புத்தகங்களே அச்சிட்டு விற்கிரு.ர்கள். அவற்றை வாங்கிப் படித்தேன். நான் கண்டவற்றைப் பற்றிய வரலாறுகள் தெரிந்தன: பல ஒவியங்களின் பொருள் தெரிந்தது. மேல் காட்டு மக்களின் பண்பாடும் நாகரிகமும் வாழ்க்கை நெறியும்