பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நின்ற சந்திரன்

பாரிஸ் என்று நாம் சொல்வதைப் பf என்றுதான் அங்கே சொல்கிரு.ர்கள். தமிழர்கள் அதைப் பாரிமா நகரம் என்று சொல்லி வள்ளல் பாரியை நினைத்துக் கொண்டார்கள். ஐரோப்பாவில் மிகவும் அழகிய நகரம் பாரிஸ் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எங்கும் கலைமயம்: அழகுமயம். பெரும்பாலும் ஐந்தடுக்கு மாளிகைகள். எல்லாவற்றிற்கும் மேலே சிலேட்டினல் வேய்ந்த கூரை. மழை பெய்தால் வழிந்துவிடும். அங்கேதான் மழை நினைத்தால் வருகிறதே! அதற்குக் குறைவே இல்லை.

நாங்கள் போனது கோடைக்காலம், குளிரின் கடுமை இல்லாத காலம். கதிரவன் விடியற்காலை 5 மணிக்கே உதயமானன். 4 மணிக்கே புலரி வந்துவிடுகிறது. இரவு 9 அல்லது 9.30 மணிவரையில் கதிரவன் காட்சி தருகிருன். 11-30 மணி வரையில் மாலே ஒளி இருக்கிறது.

பாரிஸில் இருளே இல்லை. எங்கும் ஒளி வெள்ளம். இரவு நேரத்தில்தான் அங்கே உல்லாச நடமாட்டம் அதிகம். -

மாளிகைகள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன! ஒவ்வொரு மாளிகையிலும் கலை வடிவங்கள். பாலங்களில் உள்ள கம்பங்களில் எல்லாம் காதலர் உருவங்கள்.

பிரான்சு நாட்டுக் குடியரசுத் தலைவர் ஏராளமாகப் பணத்தைச் செலவு செய்து இரண்டாண்டுக் காலத்தில்