பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 கண்டறியாதன கண்டேன்

வரையில் அதிகப் பணம் பறிக்க எண்ணுகிருர்கள். அடுத்த தெருவில் இருந்த ஓரிடத்துக்குப் போகச் சுற்றிச் சுற்றி வந்து வண்டிச் சத்தம் வாங்கிவிட்டான் ஒரு டாக்ளிக் காரன். இத்தாலி அவ்வளவு வளம் பெற்ற நாடு என்று சொல்ல முடியாது. அதனால்தான் இத்தகைய கிலே இருக்கிறதோ என்னவோ? இந்தியாவை கினைத்துக் கொள்ளும்படி போர்ட்டர்களும் டாக்ஸிக்காரர்களும் செய்தார்கள். அதோடு மற்ருேர் ஒற்றுமை. அந்த காட்டிலும் மூவர்ணக் கொடி, சிவப்பு, பச்சை, வெள்ளே. நம் காட்டில் கொடியில் மூன்று வண்ணங்களும் அகல வாக்கில் ஒன்றன்மேல் ஒன்ரு இருக்கின்றன. அங்கேயோ கெட்டுக் குத்தில் ஒன்றை அடுத்து ஒன்ருக உள்ளன.

ரோம் நகரத்தில் எங்கே பார்த்தாலும் பழங்காலத்துச் சின்னங்கள். சில இடிந்தும், சில முழு வடிவத்திலும் உள்ளன. எல்லாவற்றையும் கன்ருகப் பாதுகாத்து வைத்திருக்கிருர்கள். மிகப் பழைய நாகரிகம் வளர்த்த: பழைய நகரங்களில் ஒன்று ரோம். ரோமாபுரியை கிலேக், களமாகக் கொண்டு வரலாறு வ ளர் ந் தி ரு க் கி ற து: காவியங்கள் உருவாகியிருக்கின்றன; வீரமும் காதலும், விளைந்திருக்கின்றன.

போர்க் கடவுளாகிய செவ்வாய்க்கும் ரீஸில்வியா என்ற: மங்கைக்கும் இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். டைபர் ஆற்றில் அந்தக் குழந்தைகளை எறிந்துவிடும்படி ஒர் ஏவலனிடம் கட்டளையிட்டனர். அவர்களை எடுத்துச் சென்றவன் அவ்வாறு செய்யாமல் இரக்கத்தால் ஓர் ஒர மாக விட்டுச் சென்ருன். அந்த இரண்டு குழந்தைகளையும் கண்ட ஓநாயொன்று அவர்களுக்குத் தன் பாலக் கொடுத்து வளர்த்தது. இன்றும் இத்தாலியின் சின்ன மாகிய பெண் ஒகாயின் வடிவத்தைப் பல இடங்களிலும் காணலாம. -