பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கண்டறியாதன கண்டேன்

பெயருடன் அரசனைன். அவன் காலத்தில் இந்தியா வுக்கும் ரோமாபுரிக்கும் வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. ரோமானிய ர்களேத் தமிழர் யவனர் என்ருர்கள். அந்தக் காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த பூம்புகாரிலும் பாண்டியர்களின் இராசதானியாகிய மதுரை யிலும் யவனர்கள் வாழும் தெருக்கள் இருந்தன என்று சங்க நூல்களிலிருந்து தெரிந்து கொள்கிருேம்; யவனச்சேரி என்று அந்தத் தெருக்களைக் குறித்தனர்.

சமீபத்தில் கரூருக்கு அருகில் அகஸ்டஸ் காலத்து ரோமானிய நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றி லுைம் தமிழ் நாட்டுக்கும் ரோமுக்கும் அந்தப் பழங் காலத்தில் இருந்த தொடர்பு உறுதியாகிறது. ரோமானிய அரசுக்குட்பட்ட பால ஸ் தீ ன த் தி ல் ஏசு கிறிஸ்து திருவவதாரம் செய்தார்.

கி. பி. இரண்டாவது நூற்ருண்டில் ரோம் மிகச் சிறந்த உயர் கிலேயை அடைந்தது. அதன் பின்பு ரோமானிய அரசை எரித்துப் பகைவர்கள் சூழ்ந்தனர்.

கிறிஸ்துவ சமயம் நாளடைவில் அங்கே பரவியது. கி. பி. 330 இல் கான்ஸ்டன்டைன் என்ற மன்னன் கிறிஸ்துவ சமயமே நாட்டின் சமயம் என்று அறிவித்தான். ஐந்தாம் நூற்ருண்டில் பகைவர்களின் கொடுஞ்செயல் களால் நகரம் பாழாகியது. மறுபடியும் மதகுருக்களாகிய போப்புகள் வந்து ஆட்சியைக் கைப்பற்றினர். அவர் களுக்குச் செல்வாக்கு மிகுதியாயிற்று. ரோம் அழியாமல் பாதுகாத்த பெருமை மதகுருக்களுக்குரியது. பல இடங் களில் கோயில்களையும் அரண்மனைகளையும் துறவியர் தங்கும் இடங்களையும் கல்விச் சாலைகளையும் கட்டினர்கள்.

அந்தக் காலத்தில் எழுந்த மதில்கள், கோட்டைகள், அலங்கங்கள், படைத் தளங்களுக்குரிய இடங்கள் ஆகிய வற்றின் சின்னங்களே இன்றும் காணலாம். இடையிடையே எதிரிகள் வந்து அரசின் நிலையைக் குலத்தனர். ஆட்சி மாறி மாறி வந்தது. ..