பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கண்ணுக்கு விருந்து

'காப்பான் பெரியவன, படைப்பவன் பெரியவன?" என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விடை பகர்வார்கள். படைக்கிறவன் படைக்காவிட்டால் காப்பவனுக்கு வேலை ஏது?’ என்று தோன்றும். ஆனல் படைப்பவனுடைய வேலை ஒரு குறிப்பிட்ட கால அளவில் முடிந்துவிடுகிறது. காப்பவனுடைய வேலையோ எப். போதுமே இருந்து கொண்டிருக்கிறது. அழிப்பவனுடைய வேலையைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது?

ரோமாபுரியில் உள்ள அழகிய கட்டடங்களையும், அற்புதமான மாளிகைகளின் இடிந்த சிதிலங்களேயும் பார்த்தபோது படைப்பு, காப்பு, அழிப்பு என்ற மூன்று சக்திகளும் எத்தனை மாற்றங்களே உண்டாக்கியிருக்கின்றன. என்பது கன்ருக வெளிப்பட்டது. பல நூறு ஆண்டுகளாகக் கலைச் சுவை கிறைந்தவர்கள் மிகவும் அழகிய மாளிகைகளே, கோயில்களே. அரண்மனைகளை, கலேகிலேயங்களைக் கட்டி யிருக்கிருர்கள். அவர்களைப் போற்றத்தான் வேண்டும். அவர்களுடைய வேலை அற்ப சொற்பம் அல்ல. அந்த அழகிய படைப்புக்களைக் கலக உணர்ச்சியாலும், பகை வெறி பாலும் அழித்தவர்களே கினைத்தால் உள்ளம் கடுங்குகிறது. பல ஆண்டுகள் அருமையாகப் படைத்ததைச் சில நாளில் அழித்து விடுகிருர்கள் பாவிகள். 'குயவனுக்குப் பல நாள் வேலே, தடிகாரனுக்கு ஒரு நாள் வேலை" என்ற பழமொழி: கினைவுக்கு வருகிறது.

அழிப்பவர்கள் அழித்தாலும் மீட்டும் வாழ வந்தவர்கள். இடிபாடுகளைப் பாதுகாத்து, உருப்படியாக உள்ள