பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 கண்டறியாதன சண்டேன்

வற்றைப் போற்றி வைத்து, வரலாற்றைச் சொல்லாமல் சொல்லும் முறையில் பேணுவது எல்லாவற்றையும் விடப் பெரிய காரியம் என்று எனக்குத் தோன்றுகிறது.

தென்காசியில் வாழ்ந்த பாண்டியன் ஒரு கல்வெட்டில் எழுதிவைத்திருக்கிருன்: "நான் செய்த இந்தத் தர்மத்தை அழியாமல் காப்பாற்றுகிறவர்கள் பாதங்களே என் தலைமேல் வைத்துக்கொள்கிறேன்' என்று. அந்தப் பாண்டியனுடைய எண்ணம் நமக்குப் புரிகிறது. சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டுமென்று எவ்வளவு முயன்று ஒன்றை அமைத் தாலும், பிறகு அதைக் காப்பாற்றுவார் இல்லாமல் போனல் செய்த அத்தனையும் வீனகிவிடுகிறது. எத்தனை நிறுவனங் கள் தோற்றுவித்த பெரியவர் மறைந்த பிறகு இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன!

ரோமாபுரி நாகரிகம் என்பது வரலாறு கண்ட வள வாழ்க்கையின் எழில் ஒவியம். அந்த நாகரிகம் குலைந்தாலும். அப்போது படைத்த படைப்புக்கள் இடிந்தாலும், அவற்றின் எடுப்பான தோற்றத்தை இன்றும் ஓரளவு காண முடிகிறது. ரோமாபுரியில் பல இடிந்த சின்னங்கள் இருக்கின்றன. அவற்றை அருமையாகப் பாதுகாத்து வைத்திருக்கிருர்கள். வீனக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன என்று, அவற்றையெல்லாம் தரை மட்டமாக்கி மேலே மொட்டை மொட்டையாகக் கட்டடங் களைக் கட்டி விடுவது பெரிய காரியம் அன்று. ஆனல் இன்றைய இத்தாலியர்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் வரலாற்றுணர்ச்சியும் கலைச் சுவையும் கிரம்பியவர்கள். இடிபாடுகள் என்று புறக்கணிக்காமல் அவற்றைப் பாது காத்து வருகிருர்கள். அவற்றைப் பற்றிப் பல அரிய நூல்களே வெளியிட்டிருக்சிருர்கள். இப்போதுள்ள சிதைந்த காட்சியையும், முன்பு இருந்திருக்கும் காட்சியையும் ஒரு சேர வைத்து ஓவியங்களாக்கிக் காட்டுகிருர்கள். இப்போ துள்ள அரைகுறை வடிவத்திலிருந்து ஊகித்து முழு வடிவத்தையும் ஒவியர்கள் கிரப்பி வண்ணச் சித்திரமாக்கித் தர. அவற்றை அழகழகாக அச்சிட்டிருக்கிருர்கள். மூல.