பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்ற சந்திரன் 25

இங்குள்ள மாளிகைகளேயெல்லாம் துப்புரவு செய்யச் செய்தாராம். அதனால் அவை யாவும் அற்புதமான ஒவியங்களைப் போலப் பளிச்சென்று விளங்குகின்றன.

நாங்கள் பாரிஸை அடைந்த முதல் நாள் மாலை இரவு நடன அரங்குக்கு ஒரு கிழவி அழைத்தாள் என்று சொன்னேன். அப்போது காங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். அதைக் கண்டு அவளும் சிரித்துக்கொண்டே போய்விட்டாள். நாங்களும், "இனி எங்கும் போகவேண்டாம். நம் அறைகளுக்கே போய்விடலாம் என்று எண்ணி, டாக்மார் ஹோட்டலே வந்து அடைந்தோம்.

நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு லத்தின் வளாகம் (Latin Quarter) என்று பெயர். அங்கேதான் பல வகைக் கல்லூரிகள் இருக்கின்றன. ரூ ஸான் ழாக் (Rue Saint Jacques)என்னும் தெருவில் இருந்தது, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல். ஒரு கட்சத்திர ஹோட்டல் முதல் நான்கு நட்சத்திர ஹோட்டல் வரையில் கொடுக்கும் பணத்துக்குத் தகுந்த வசதிகளையுடைய இடங்கள் அங்கே இருக்கின்றன. நான் தங்கியது இரண்டு நட்சத்திர ஹோட்டல். ஹோட்டல் களில் தங்குவதற்கும் படுப்பதற்கும் ரோடுவதற்கும் வசதி உண்டு. காலையில் சிற்றுண்டி அளிப்பார்கள். மற்ற நேரங்களில் உணவு விடுதிகளில் (Restaurants) சென்று தான் உணவு கொள்ள வேண்டும். -

நாங்கள் இருந்த இடத்திலிருந்து உலகத் தமிழ் மாநாடு கூடிய இடம் ஏறத்தாழ ஒன்றரைப் பர்லாங்கு தூரத்தில் இருந்தது. அந்த இடத்துக்குக் காலேஜ் த பிரான்ஸ் (College de France) என்று பெயர். அதற்குப் போகும் வழிநெடுகப் பல கல்லூரிக் கட்டிடங்கள் இருக்கின்றன. நாங்கள் போயிருந்தபோது மாணுக்கர்களுக்கு விடுமுறைக் காலம். ஆகையால் கல்லூரிகள் மூடியிருந்தன. தமிழ் மாநாடு ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி