பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 கண்டறியாதன கண்டேன்

இயந்திரம் போலச் சொல்லிக்கொண்டே போகிருர், நாம் எதையாவது சந்தேகம் கேட்க நேரம் ஏது:

கண்ணுக்கு விருந்தாகிய காட்சிகளிலேதான் அதிக மாக மனம் ஈடுபட்டுவிடுகிறது. நல்ல வேளையாக அங்கே விற்கும் புத்தகங்கள் மிகத் தெளிவாக நாம் பார்த்த காட்சி களின் வரலாற்றையும் சிறப்பையும் கூறுகின்றன. அவற்றை இன்று படித்தாலும் மறுபடியும் ரோமாபுரியில் அந்த மாளிகையின்முன், இடிபாட்டின்முன், கோயிலின் முன் நிற்பதுபோன்ற உணர்ச்சி உண்டாகிறது.

பியாஸா நவோனு (Plazza Navola) என்பது இந்த ககரத்தில் உள்ள பெரிய சதுக்கம். அதன் நடுவே அழகான ஊற்றுக்களும் பெரிய பெரிய உருவச் சிற்பங்களும் இருக்கின்றன. ரோமாபுரியில் உள்ள இடங்களைப் பார்க்கப் போகும்போது அடிக்கடி இந்தச் சதுக்கத்தைச் சுற்றிப் போகவேண்டியிருக்கம். ஆறுகள் என்ற பெயரில் நடுவே ஓர் ஊற்று இருக்கிறது. தாடியும் சுருண்ட கேசமும் கொண்ட ஒர் ஆண்மகன் திண்ணிய தோளுடன் கையில் பெரிய தடியைப் பற்றிக் கொண்டு சாய்ந்த கிலேயில் அமர்ந்திருக்கிருன், அவன் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழே உள்ள ஊற்றிலிருந்து வேகமாகப் புனல் வருகிறது. அந்தத் தண்ணிர் அலங்கார வளைவுகளடங்கிய பெரிய தொட்டியில் விழுந்து ஒர் அ ழ கி ய குளத்தின் தோற்றத்தைத் தருகிறது. அந்தத் தொட்டியின் சுவர்களி லெல்லாம் சிற்பவடிவங்கள்; நடுவிலும் சிற்ப வடிவங்கள். அங்கே கின்று பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

நாம் ரோமாபுரிவாசியானல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதை மட்டும் பார்ப்பதாக இருந்தால் நேரம் போவது தெரியாமல் பார்க்கலாம். நாமோ அயல் காட்டி லிருந்து வந்தவர்கள். தங்குகிற நாட்களோ மிகச் சில.