பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வத்திகன் பெருங்கோயில் 309.

ஏசுபெருமானுடைய மாணவராகிய அப்போஸ்தலர் பீட்டர் இங்கே அருட் பிரசாரம் செய்து வந்தார். மத. விரோதிகளால் கொல்லப்பட்டார். வீரமரணம் எய்திய அவருடைய சமாதி இங்குள்ள திருக்கோயிலில் இருக்கிறது. ஏசு கிறிஸ்துவினலே தம்முடைய சர்ச்சுக்குத் தலைவர் என்று திருவாணையிட்ட சிறப்பையுடையவர் ஞானி பீட்டர். அவருக்குப் பின் உலகத்திலுள்ள கிறிஸ்துவ சமயத்தினர் அனைவருக்கும் உயர்பெரும் குருவாகப் பல போப்புகள் ஒருவர் பின் ஒருவராக இந்தச் சமயப் பீடத்தில் இருந்து வருகிருர்கள். இங்கே உள்ள போப்பாண்டவர் ரோமாபுரியின் மதகுரு: அகில உலகப் பிஷப்பும் அவரே, போப்பாண்டவருடைய அரசாட்சியில் வத்திகன் நகரம் மட்டும் அடங்கியிருந்தாலும் அவருடைய அரசியல் கிலேயங்களும் சொத்துக்களும் இந்த நகரத்திற்குப் புறம்பே ரோமாபுரியிலும் பரந்திருக்கின்றன.

வத்திகன் குன்றத்தின்மேல் அமைந்திருக்கிறது இந்த ககரம். கான்ஸ்டண்டைன் என்ற அரசர் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொண்டபோது முதல் முதலாக இங்கே ஞானி பீட்டரின் சமாதி சாதாரண வடிவில் எழும்பியது. கி. பி. 67ஆம் ஆண்டில் பீட்டர் இங்கே சமாதி செய்யப் பட்டார். அப்போஸ்தலர்களின் அரசராகிய அவருடைய சமாதியைச் சுற்றிச் சில கட்டடங்கள் உண்டாயின. பிற்காலத்தில் வந்த போப்பாண்டவர்கள் இந்தச் சமாதிக்குப் பாதுகாப்பாகச் சுற்றுச் சுவர் எழுப்பினர்கள். கி.பி.1550 முதல் 1640 வரை இவ்வாறு சுற்றுச் சுவர்களே எழுப்பினர்கள். இப்போது வத்திகன் நகரம் முழுவதையும் எல்லே கோலிக் கொண்டு சுற்றுச் சுவர் அமைந்திருக்கிறது.

13; ஏகராப் பரப்பில் இங்குள்ள கட்டடங்கள் அமைங் திருக்கின்றன. இத்தாலிய அரசுக்குட்பட்டிருந்த இந்த -ாகரம், பதினேராவது பயஸ் என்னும் போப்பாண்டவர் காலத்தில் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தனியரசாயிற்று. யாருடைய தொடர்பும் இல்லாத தனியாட்சி புரியும் தலைவராகப் போப்பாண்டவர் ஆனர்.