பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 கண்டறியாதன கண்டேன்

சமய குரவராதலின் போப்பாண்டவர் என்று சொல் கிருர்கள். அவரைப் போப்பரசர் என்றும் சொல்லலாம், வத்திகன் அரசின் தனித் தலைவராக இருப்பதனால்,

இந்த நகரத்துக்கு நான்கு பெருவாயில்கள் இருக்கின்றன. இங்கே ஒரு ரெயில்வே ஸ்டேஷனும் இருக்கிறது. ஏராளமான பஸ்களும் கார்களும் நகருக்குள் மக்களைக் கொண்டு வந்து கவிழ்க்கின்றன; மீட்டும் முகந்து, கொண்டு செல்கின்றன.

ஸெயிண்ட் பீட்டரின் பெரிய கோயிலுக்கு முன்னே மிகப் பெரிய முற்றவெளி இருக்கிறது. அதன் இரு மருங்கும் இரண்டு ஊற்றுக்கள் உள்ளன. அரைவட்டமாகப் பல கட்டிடங்கள் உள்ளன. நேரே நடுவில் மிக உயர்ந்த விமானத்தோடு ஸெயிண்ட் பீட்டரின் கோயில் கிமிர்ந்து கிற்கிறது. இந்தத் திருக்கோயிலையும் உள்ளே உள்ள சிற்பங்களையும் மிகச் சிறந்த சிற்பிகள் அவ்வப்போது அமைத்து இந்த அழகிய தோற்றத்தைப் பெறும்படி செய் திருக்கிரு.ர்கள். கியான் லொரென்ஸோ பெர்னினி, மைகேலாஞ்சலோ, ரபேல் போன்ற சிற்ப வல்லுநர்களின் கைவண்ணத்தை இங்கே காணலாம். திருக்கோயிலின் இருமருங்கும் வளைவாக உள்ள பகுதிகளில் 284 பிரம் மாண்டமான தூண்கள் உள்ளன. சுவரோடு சார்ந்த, சதுரத் தூண்கள் 88, இந்தக் கட்டடங்களுக்கு மேலே உயிர்த் தியாகம் செய்தவர்களும் ஞானிகளுமாக 96 பேருடைய சிலே வடிவங்கள் காட்சி அளிக்கின்றன.

உள்ளே ஞானி பீட்டரின் சமாதிக்கு மேலே நான்கு வெண்கலக் கம்பங்கள் தாங்கிய மண்டபம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு கம்பமும் முறுக்கிய வடிவும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் உடையது. இந்த மண்டபத்தைப் பெர்னினி என்பவர் தம்முடைய 24ஆவது பிராயத்தில் உருவாக்கினராம். அதன் எதிரே பள்ளமான இடம் ஒன்று இருக்கிறது. அங்கே மண்டியிட்டகோலத்தில் ஒரு வடிவம் உள்ளது. இந்தப் பள்ளத்தின் சுற்றுச்