பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 கண்டறியாதன கண்டேன்

தாண்டிச் சமாதிக்கு நேர் எதிரே ஒரு சிங்காதனத்தில் ஸெயிண்ட் பீட்டர் அமர்ந்திருக்கிருர். மிகப் பெரிய வடிவம் அது. இந்த ஆதனத்தின்மேலே மேகங்கள் விதானம் அமைப்பது போன்ற தோற்றம் பக்கவாட்டில் இரண்டு தேவகைகள். பரிசுத்த ஆவியைக் குறிப்பிக்கும் வெண் புரு ஒன்று சோதிச் சுடரின் நடுவே அமர்ந் திருக்கிறது.

இந்தக் கோயிலின் உட்புறம் மிக விசாலமானது. மிக மிக உயரமானது. எங்கே பார்த்தாலும் சிற்பங்கள். அண்ணுக்து பார்த்துக் கொண்டே போகலாம். ஆனல் கழுத்து வலிக்குமே! ஒரிடத்தில் புண்பட்ட கிறிஸ்துப் பெருமானின் திருமேனியைத் தன் மடியிலே கிடத்திக் கொண்டு அமர்ந்திருக்கும் கன்னி மேரியின் பளிங்குச் சிலை வடிவம் இருக்கிறது. அதை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். மைகேலாஞ்சலோ 1498-இல் வடித்த அழகுச் சிற்பம் இது. அந்தச் சிற்ப மன்னர் தம்முடைய இருபத்தைந்தாவது பிராயத்தில் இந்தக் கலையுருவைப் படைத்தாராம். ஏசு பெருமானப் பார்த்தால் உயிர் நீங்கிய உடம்பாகத் தெரியவில்லை, அன்பிலுைம் கருணை யிலுைம் குழைந்த திருமேனியையே அங்கே காண்கிருேம். கன்னி மேரியின் திருமுகத்தில் சாந்தமும் அவலமும் இணைந்த அற்புத அமைதி ஒளிர்கிறது.

உள்ளிருந்து கோயிலின் விமானத்தை அண்ணுந்து பார்த்தால் அதன் வேலைப்பாட்டை வியக்காமல் இருக்க முடியாது. எவ்வனவு பிரம்மாண்டமான விமானம் அது! பதினறு ஆரைகளாகப் பகுத்து அமைத்திருக்கும் அதனைக் கற்பனை செய்து அமைத்தவரும் மைக்கேலேஞ்சலோவே.

இங்கே பீடாதிபதியாக அமர்ந்தவருள் ஒருவராகிய பன்னிரண்டாவது இன்னெஸெண்ட் (Innocent XII) என்பவரின் உருவம் ஓரிடத்தில் இருக்கிறது. சிங்கா தனத்தில் முடியுடன் அமர்ந்திருக்கும் அவருக்குக் கீழே இரண்டு தேவ மகளிர் கிற்கின்றனர். ஒருத்தி அறத்தின்